கடற்படைக்கு விடுக்கப்பட்டுள்ள மீனவப் பெண்மணியின் கோரிக்கை….!

மாதகல் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்படியில் ஈடுபடும் இந்தியா இழுவைமடிப் படகுகளால் ஏற்பட்ட இழப்பீட்டை நிவர்த்தி செய்வதற்கு எனது தாலிக்கொடியை அடகு வைத்தும் மீள முடியவில்லை என வலிகாமம் தென்மேற்கு கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் பொருளாளர் பெனடிக் நிர்மலா தெரிவித்தார். நேற்றையதினம் வியாழக்கிழமை... Read more »

முன்னாள் பருத்தித்துறை நகரசபிதா வே.நவரத்தினம் மரணம்…!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையின் தவிசாளராக இருந்த வேலுப்பிள்ளை நவரத்தினராசா சற்றுமுன் மரணமடைந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது கடந்த 29/06/2024 அன்று முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த போது புளியம்பொக்கணைப் பகுதியில் வீதியில்  அமைக்கப்பட்ட பாதுகாப்பற்ற சமிக்கை இன்றில வீதித்தையில் (பம்மிங்) மோட்டார் சைக்கிள்... Read more »

பொலிசார் மோட்டார் சைக்கிளை உதைந்து மின்சார சபை ஊழியர் உயிரிழப்பு – பொலிசில் வாக்குமூலம்

கடந்த மே மாதம் பத்தாம் தேதி யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியின் உன்னாலே கட்டுவேன் ஆயக்கடவை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இடம் பெற்ற விபத்தில் மின்சார சபை ஊழியர் செல்வநாயகம் பிரதீபன் வயது 41, என்ற பிரஸ்தாப நபர் உயிரிழக்க போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின்... Read more »

அரச  வளங்களை முடக்கும் வைத்திய அதிகாரிகள் – சாவச்சேரிக்கு வந்த இயந்திரம் எங்கே?

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட பல மில்லியன் அமெரிக்க டொலார் பெறுமதியான இயந்திரத்தை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றியது யார் என போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமகன் ஒருவர் கேள்வி எழுப்பினார். நேற்றையதினம் திங்கட்கிழமை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை மீள இயக்கக்கோரியும் வைத்திய மாபியாக்களை வெளியேறுமாறு கோரி... Read more »

வல்லிபர ஆழ்வார் திருக்கோயில் பிரதம குரு இயற்கை எய்தினார்….!

யாழ்ப்பாணம் வடமராட்சியின் வரலாற்று  சிறப்பு மிக்க வல்லிபுர குறிச்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின்  பிரதம குரு கணபதிசாமிக்குருக்கள்  சுதர்சனக்குருக்கள்  அவர்கள் தனது 76 வது வயதில்  இன்று காலை 10:00. மணியளவில்  செவ்வாய்க்கிழமை  இயற்கை எய்தினார். இவர் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு  மேலாக வல்லிபுர... Read more »

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஆறுகள் சிலவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன் நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையும்  விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக களுகங்கை, நில்வளா கங்கை, அத்தனகளு ஓயா, ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் குறித்த ஆறுகளை அண்மித்துள்ள தாழ்நிலபகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... Read more »

ஸ்தம்பிதமடைந்த பாடசாலை செயற்பாடுகள்

சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக ஆசிரியர்கள், அதிபர்கள் முன்னெடுக்கும் சுகவீன விடுமுறைப்போராட்டத்தினால் நாடளாவிய ரீதியில் கல்வி நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் வரவுகள்... Read more »

சாவகச்சேரி வைத்தியசாலையின் கடமைகளை பொறுப்பேற்றார் வைத்தியர் ரஜீவ்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் கடமைகளை வைத்தியர் ரஜீவ் அவர்கள் இன்றையதினம் பொறுப்பேற்றார். குறித்த வைத்தியசாலையின் அத்தியட்சகராக பணிபுரிந்த வைத்தியர் அர்ச்சுனா அவர்கள் வடக்கு சுகாதார துறையில் காணப்பட்ட பல்வேறு ஊழல்களை வெளிக்கொணர்ந்த நிலையில் வடக்கு சுகாதார துறைக்குள் இருந்து அவருக்கு பாரிய எதிர்ப்பும், மக்களிடம்... Read more »

யாழில் ஆரம்பமான கண்டன ஆர்ப்பாட்டம் –

யாழ்ப்பாணம் தென்மராட்சி  சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்தை வலியுறுத்தியும், வைத்திய பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் முன்னெடுக்கவுள்ள கடையடைப்புக்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. குறித்த கண்டன ஆர்ப்பாட்டமானது இன்று (08) காலை 8 மணியளவில் ஆரம்பமாக தீர்மானித்திருந்த நிலையில்... Read more »

யாழ். இளைஞன் கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது!

போலியான இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு  செல்லவிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்  கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை  சேர்ந்த 27 வயதுடை இளைஞர் ஒருவரே இவ்வாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »