வீட்டை சுற்றி பாம்புகளும் வெள்ளமும் உள்ளதால் வீட்டுக்கு செல்ல முடியாத நிலை – பாதுகாப்பு நிலையத்தில் உள்ள மக்கள் கவலை!

வெள்ள அனர்த்தம் காரணமாக வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 அங்கத்தவர்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர். இவர்கள் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, ஜே/57 கிராம சேவகர் பிரிவில் வசிப்பவர்கள். தமது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதாகவும், வீட்டை சுற்றி பாம்புகள் உள்ளதாகவும் கூறுகின்ற... Read more »

தென்மராட்சியில் வெள்ள  அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உணவு பொதிகள் வழங்கி வைப்பு!

தென்மராட்சியில் வெள்ள  அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு சுமார் 400 சமைத்த உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அவுஸ்ரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் தாயகம் வானொலி சேவையின் நிதி பங்களிப்பில் சாவகச்சேரி நகர இளைஞர்களின் ஒத்துழைப்போடும் குறித்த உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது நகர இளைஞர்கள்... Read more »

யாழ்ப்பாணத்தில் மழை வெள்ளத்தால் 64ஆயிரத்து 621பேர் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 19560 குடும்பங்களைச் சேர்ந்த 64ஆயிரத்து 621பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 161வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. அத்துடன் 7 உட்கட்டமைப்புகள் முழுமையாகவும், 8 சிறு மற்றும்... Read more »

கொடுக்குளாய் இயக்கச்சி அபாயவெளி பாதை திருத்தம்….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கின் ஆழியவளையிலிருந்து இயக்கச்சி செல்கினற அபாய வெளியேற்ற பாதை மழைவெள்ளம் காரணமாக பாரிய சேதம் ஏற்பட்டிருந்த நிலையில் அதனை புனரமைக்கும் பணியில் பருத்தித்துறை பிரதேச சபையால் நேற்று பிற்பகல் ஈடுபட்டுள்ளது. இப் பாதையால் நாளாந்தம் வர்த்தக ரீதியிலான பயணத்தில் ஈடுபடுவோர் பெரிதும்... Read more »

மருதங்கேணி பாலம் உடைப்பெடுக்கும் அபாயம்,  போக்குவரத்து முடங்கலாம்.! 

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில்  அமைந்துள்ள பாலம்  உடைப்பெடுக்கும்  அபாய நிலையில் உள்ளது. தற்போது பெய்துவரும்  கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலே குறித்த பாலம் முழுமையாக உடைப்பெடுக்கும் அபாய நிலையில் உள்ளது. நேற்றைய தினம் பகுதியளவில் குறித்த பாலம் சேதமடைந்துள்ளது. தற்போது கனரக... Read more »

ஞானச்சுடர் 323  ஆவது மலர் வெளியீடு.!

சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாதாந்தம் வெளியிடப்படும் ஆன்மீக சஞ்சிகையான ஞானச்சுடர் 323 வது மலர் நேற்று வெள்ளிக்கிழமை 29/12/2024 வெளியீடு செய்யப்பட்டது. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில்... Read more »

மாவீரர் நாளில் கஜேந்திரகுமார் எம்.பி பாதுகாப்பு தரப்பு முரண்பட்ட விவகாரம் – பாதுகாப்பு செயலாளர் கருத்து!

உயிரிழந்தவரை நினைவு கூர தடை செய்யப்படவில்லை என்றும் மாவீரர் தின நிகழ்வுகளில் பாதுகாப்பு தரப்பினரினரால் ஏற்பட்ட இடையூறு தொடர்பாக நான் அறியவில்லை எனவும் பாதுகாப்பு செயலாளர் சம்பத் துயகொந்த தெரிவித்துள்ளார். அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம் நிறைவடைய முன் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படைகளின்... Read more »

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையினை கண்டறியும் நோக்கிலான உயர் மட்ட கலந்துரையாடல்…!

யாழ்ப்பாண மாவட்டத்தின் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையினை கண்டறியும் நோக்கிலான உயர் மட்ட கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இவ் உயர்மட்டக் கலந்துரையாடலுக்கு பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொன்த, மற்றும் கடற்றொழில் அமைச்சர் ... Read more »

வெள்ளவாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்ற ஆளுநர் பணிப்பு

வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள... Read more »

11 பேர் ஒரே நேரத்தில் கொல்லப்பட்ட மஹர சிறையில் மற்றொரு மரணம்

கைதிகளைக் கொலை செய்வதில் பெயர் பெற்ற மஹர சிறையில் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த கைதி ஒருவரின் சடலத்தை அடையாளம் காண்பதற்காக அவரது ஒரே உயிருள்ள உறவினரான தாயாரிடம் கூட வழங்கப்படவில்லை என்பதை கைதிகளின் உரிமைகளுக்காகப் போராடும் பிரபல அமைப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இந்த... Read more »