யாழ் பெண்ணுக்கு கிடைத்த மனித உரிமைகளுக்கான விசேட விருது…!

ஈழத் தமிழ் பெண்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர் சுகந்தினி மதியமுதன் தங்கராஜிற்கு தென்கொரியாவின் மே 18 நினைவு அறக்கட்டளை 2024 குவாங்ஜூ விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. இலங்கை இராணுவத்திடம் அனைத்தையும் இழந்த ஏராளமான பெண்களுக்கு தைரியம் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக சுகந்தினி... Read more »

யாழ். பல்கலை மருத்துவபீட கட்டட திறப்பு விழாவுக்கு எதிர்ப்பு..!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கட்டடமொன்றை திறந்துவைப்பதற்காக வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகம் மற்றும் மருத்துவபீட வளாகத்தில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. கல்விசாரா பணியாளர்கள் சம்பள... Read more »

யாழில் 7 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிப்பு…!

நாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் 7 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சீரற்ற காலநிலையால் நல்லூர்... Read more »

வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு சீனா அரசாங்கத்தினால் உதவிப் பொருட்கள்…!

வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய சீனா அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள 1500 மில்லியன் ரூபாய் பெறுமதியான உதவிப் பொருட்கள் உரியவர்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று(23) நடைபெற்றது. சூம் தொழினுட்பத்தினூடாக  இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில்... Read more »

தையிட்டி விகாரைக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம்!

சட்டவிரோதமாக  தையிட்டியில் அமைக்கப்பட்ட  திஸ்ஸ விகாரைக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தியவாறு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விகாரையானது தமிழ் மக்களது காணிகளை அபகரித்து சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து  குறித்த விகாரையை அகற்றுமாறு கோரி ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டம் தமிழ் தேசிய... Read more »

ஓராண்டு கடந்து தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிரான போராட்டம்..!

தையிட்டியில் நேற்றைய தினம் ஆரம்பமான தையிட்டி போராட்டமானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். குறித்த விகாரையில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஒவ்வொரு பௌர்ணமி... Read more »

இளைஞர் மீது பொலிஸார் வாள்வெட்டு!!

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் மீது சிவில் உடையில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் யாழ். தொல்புரம் மத்தியில் நேற்று இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டவர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் விசேட பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் எனக்... Read more »

திடீரென மயங்கி வீழ்ந்து ஒருவர் மரணம்!

யாழ்ப்பாணம், ஊரெழு கிழக்கில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவர், திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். ஊரெழுப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகே நேற்று இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 48 வயதுடைய சிங்கரத்தினம் சசிக்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்... Read more »

வற்றாப்பளை கண்ணகை அம்மனை தரிசித்து விட்டு வந்த யாழ்ப்பாண பக்தர்களுக்கு ஏற்பட்ட சோகம்!

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு – சாந்தை பகுதியில் இருந்து வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வந்த பக்தர்கள் பேருந்து தடம்புரண்ட நிலையில் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மேற்குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் ஒன்றுசேர்ந்து பேருந்து ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி வற்றாப்பளை... Read more »

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 5 குடும்பங்கள் பாதிப்பு!

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக இதுவரை யாழ்ப்பாணத்தில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/91 கிராம சேவகர் பிரிவில்... Read more »