ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவருக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ.கலிட் நாசர் சுலைமான் அல்அமீரி (H.E. Khaled NasserSulaiman AlAmeri), வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று (01.03.2024) மாலை இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு... Read more »

வடமாகாண சட்டத்தரணிகளுக்கான சட்ட மாநாடும், தொழில்வான்மை விருத்தி தொடர்பாக கருத்தரங்கும்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண சட்டத்தரணிகளுக்கான சட்ட மாநாடும், தொழில் வான்மை விருத்தி தொடர்பான கருத்தரங்கும் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் சிரேஸ்ட சட்டத்தரணி த.தவராசா தலைமையில் நடைபெற்றது. இவ் கருத்தரங்கு மாநாட்டுக்கு பிரதம அதிதியாக இலங்கை உயர்நீதிமன்ற நீதியரசர்... Read more »

நாகர்கோவில் மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுநர் போட்டி

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகாவித்தியாலய வருடாந்திர இல்லமெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நேற்று வெள்ளிக்கிழமை 01.03.2024 பி.ப.01.45 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது. பாடசாலை முதல்வர் கு.கண்ணதாசன் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் சி.இராமச்சந்திரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதோடு சிறப்பு... Read more »

யாழ் பல்கலையில் பறக்கும் கருப்புக் கொடிகள்…!

சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ் பல்கலைக் கழக வளாகமெங்கும்  இன்றையதினம்(02) கறுப்பு கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈழத்தமிழர் சாந்தன்,... Read more »

தமிழருக்கு நீதி கிடைக்காது என்பவர்கள் தமக்கு நீதி கிடைக்க நீதிமன்றங்களை நாடுவது வேடிக்கையானது…! அமைச்சர் டக்ளஸ்

இலங்கை நீதிமன்றங்களில் தமிழருக்கு நீதி கிடைக்காது என்பவர்கள் தமக்கு நீதி கிடைக்க நீதிமன்றங்களை நாடுவது வேடிக்கையானது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசு தமிழருக்கு நீதியும் வழங்காது தீர்வும் தராது என்றவர்கள், இலங்கை... Read more »

யாழ் மக்களை திரும்பி பார்க்க வைத்த வெளிநாட்டவர்கள்…!

யாழ். மானிப்பாய் வைத்தியசாலையின் வளர்ச்சிக்காக வெளிநாட்டவர்களால் துவிச்சக்கரவண்டி பயணம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த 30 இற்கும் மேற்பட்டோர்,  துவிச்சக்கர வண்டிப் பயணம் மூலம் நிதி சேகரித்து அதனை யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு... Read more »

சாந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் வெளியான தகவல்

சாந்தனின் உடல் நேற்றையதினம்(01)  இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில்  சாந்தனின் இறுதிக்கிரியைகள் நாளை(03) இடம்பெறவுள்ளதாக நேற்றையதினம் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில்  இறுதிக் கிரியை இடம்பெறுவது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவரது சகோதரர் மதிசுதா தெரிவித்துள்ளார். அவரது பூதவுடலுக்கு மீள் உடற் கூற்றுப் பரிசோதனை செய்யப்... Read more »

இளைஞர் மன்ற தலைமைத்துவ உச்சி மாநாடு 04 ஆம் திகதி

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் இளைஞர் மன்ற தலைமைத்துவ உச்சி மாநாடு எதிர்வரும் 04ஆம் திகதி முதல் 07ஆம் திகதிவரை கொழும்பில் நடைபெறவுள்ளது. இலங்கையில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த மாநாட்டில் பல்வேறு பின்னணிகளைக் கொண்ட 100 க்கும் மேற்பட்ட இளம் தலைவர்கள் ஒன்றுகூடவுள்ளனர்.... Read more »

வடமாகாண மாகாணத்தின் வேக நடை போட்டி

வடமாகாண மாகாணத்தின் வேக நடை போட்டியில் ஆண்கள் பிரிவில் கிளிநொச்சி முதலிடமும் பெண்கள் பிரிவில் யாழ் மாவட்டம் முதல் இடத்தையும் பெற்றுள்ளது. வடமாகாண மாகாணத்தின் வேக நடை போட்டியில் ஆண்கள் பிரிவில் கிளிநொச்சி முதலிடமும் பெண்கள் பிரிவில் யாழ் மாவட்டம் முதல் இடத்தையும் பெற்றுள்ளது.... Read more »

சாந்தனுக்கு நீதிகோரி யாழில் முற்றுகை போராட்டம்

தமிழகத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ள சாந்தனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டமானது, யாழ் மருதடி வீதியிலுள்ள இந்திய துணை தூதரகம் முன்பு நாளை மறுதினம் 03.03.2024 காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. “இந்திய -திராவிட கூட்டுச்... Read more »