தென்னிலங்கையில் பரபரப்பு

குருணாகல், நாரம்மல பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று இரவு கடும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறி ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் லொறியை நிறுத்தி சோதனையிட்டபோது, ​​பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி இயங்கி சாரதி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் சாரதி உயிரிழந்துள்ளார்.... Read more »

கட்டைக்காட்டில் கடற்படை திடீர் சுற்றிவளைப்பு-தடை செய்யப்பட்ட வலைகள் பறிமுதல்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் இன்று காலை திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். கடற்பகுதியை அண்டிய பிரதேசத்தை திடீரென சுற்றிவளைத்த கடற்படை பல மீனவர்களையும்,அவர்களது உடமைகளையும் சோதனை செய்தனர். இதன்போது தடைசெய்யப்பட்ட தங்கூசிவலைகளை வைத்திருந்த மீனவர்களிடம் இருந்து குறித்த வலைகள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.... Read more »

நாட்டின் பல பகுதிகளுக்கும் இன்று மழை

இன்று வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யும் என சிரேஸ்ட வானிலை ஆய்வாளர் கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள்... Read more »

ஜோர் தா னில் சிக்கிய தொழிலாளர்களை ‘மீட்கும் இயலுமை’ இலங்கைக்கு இல்லை

ஜோர்தான் நாட்டில் தொழிற்சாலை ஒன்று மூடப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாக அங்கு பணியாற்றிய நூற்றுக்கணக்கான இலங்கைப் பெண்கள் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர். அந்த நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் குறித்த பெண்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளையோ அல்லது நாடு திரும்பவோ உதவும் இயலுமை இல்லாமையினால்... Read more »

உள்நாட்டு மீனவர்களையும் உள்நாட்டு வளங்களையும் பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்- வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர்  என்.எம்.  ஆலம்

இந்திய மீனவர்களின் வருகையினால் எமது மீனவர்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு இது வரை இழப்பீடுகள் வழங்காத நிலையில் மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.எனவே  உள்நாட்டு மீனவர்களையும் உள்நாட்டு வளங்களையும் பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கத்தின்... Read more »

சடுதியாக குறைந்த விலை

நாட்டில் கடந்த சில வாரங்களாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கரட் ,லீக்ஸ், கத்தரி, வெங்காயம், கோவா உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகள் ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் 2000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கேரட்... Read more »

போலி நாணய தாள்களுடன் ஒருவர் கைது

நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து நல்லதண்ணி நகரில் இன்று அதிகாலை மேற்கொண்ட சோதனையின் போது வலஸ்முல்லை பகுதியைச் சேர்ந்த 37 வயது உடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் இருந்து சட்ட... Read more »

மலையகத்திற்கான ரயில்வே சேவை பாதிப்பு

மலையகத்திற்கான புகையிரத சேவைகள் இன்று (16) முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்கள கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நானுஓயாவிலிருந்து நேற்று (15) கொழும்பு நோக்கி புறப்பட்டு வந்த விசேட ரயில் கிறேஸ்வெஸ்டனுக்கும் நானுஓயாவிக்கு இடையில் தடம்புரண்டதால் நேற்று 3.00 மணி முதல் மலையகத்திற்கான ரயில்... Read more »

வடக்கு மாகாண புதிர் எடுத்தலும், தைப்பொங்கல் விழாவும் இன்று இடம்பெற்றது!

வடக்கு மாகாண புதிர் எடுத்தலும், தைப்பொங்கல் விழாவும் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல்லவராயன்கட்டு மாதிரி கிராமத்தில் சிறிநாகபூசனி அம்பாள் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்... Read more »

இன்றைய தங்க நிலவரம்

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதற்கமைய இலங்கையில் இன்றைய (16) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,210 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி... Read more »