மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்படும்……!எரிசக்தி அமைச்சர்!

நாட்டில் எதிர்வரும் நாட்களில் மண்ணெண்ணெய் விலையை கட்டாயம் அதிகரிக்க வேண்டியேற்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போது அமைச்சர் இதனை தெரிவித்தார். கடந்த காலங்களில் நாட்டு மக்களுக்கு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் என்பவற்றை குறைந்த விலைகளிலேயே அரசாங்கம் வழங்கி... Read more »

சிங்கள பௌத்த அரசை அகற்றி பன்மைத்துவ அடையாளம் கொண்ட அரசினை உருவாக்குவது தான் இன்றைய நிலைக்கு தீர்வு….! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

இலங்கை நெருக்கடி மிக மோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கின்றது. எரிபொருள் கிடைப்பதற்கான மார்க்கங்கள் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. திரும்ப வராது என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கடன் கொடுப்பதற்கு யார்தான் முன்வருவார்கள். இரக்கத்தின் அடிப்படையில் நன்கொடையாக கிடைப்பதுதான் தற்போது வந்துகொண்டிருக்கின்றது. இந்தியா தனது கொல்லைப்புறத்தில் அமைதியின்மையை விரும்பவில்லை... Read more »

யாழ்ப்பாணத்திற்கு பொருட்களை கொண்டுவர புகைரத சேவையை பெற்றுத்தாருங்கள் வணிகர் கழகம் கோரிக்கை…! அங்கஜன் கடிதம்.. |

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் விநியோக நடவடிக்கைகளுக்கு சலுகை விலையில் புகைரத சேவையை ஒழுங்குபடுத்தி தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அத்தியாவசிய... Read more »

டாஸ் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிக்கான அடுத்த ஓராண்டுக்கான ஜப்பான் நாட்டு உதவிக்கான ஒப்பந்தம்…!

டாஸ் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிக்கான அடுத்த ஓராண்டுக்கான ஜப்பான் நாட்டு உதவிக்கான ஒப்பந்தம் இன்று கைச்சார்த்திடப்பட்டது. இன்று காலை 8.30 மணியளவில் முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெறும் பகுதியில் குறித்த ஒப்பந்தம் கைச்சார்த்திடப்பட்டது. ஜப்பான் நாட்டின் தூதுவர் மிசுகோஸி கிடேகி... Read more »

காணி கொள்ளையை நிறுத்துவோம் : இனம் மற்றும் மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தடுப்போம்….! பொது அமைப்புக்கள்.

காணி கொள்ளையை நிறுத்துவோம், இனம் மற்றும் மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தடுப்போம் என வட மாகாண பெண்கள் குரல் உட்பட பல்வேறு அமைப்புக்களை உள்ளடக்கிய அமைப்பு ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. இலங்கையானது தற்பொழுது பொருளாதார ரீதியாக பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது.... Read more »

சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனராக இந்தியர் நியமனம்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசிபிக் துறையின் இயக்குனராக கிருஷ்ணா சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.  சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனராக இருந்த சான்கியாங் ரீ, கடந்த மாதம் ஓய்வுபெற்ற நிலையில், அந்த அப்பதவிக்கு தற்போது துணை இயக்குனராக உள்ள கிருஷ்ணா சீனிவாசன், இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச... Read more »

இலங்கையில் முழுமையான மனிதாபிமான அவசரநிலை ஏற்படும் அபாயம் – ஐ.நா எச்சரிக்கை,

சுதந்திரம் பெற்றதன் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் சமகாலத்தில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், முழுமையான மனிதாபிமான நெருக்கடிக்குள் தள்ளப்படும் அபாயத்தில் இலங்கை உள்ளதாக ஐ.நா மனிதாபிமான அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது. எரிபொருள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு, பணவீக்கம் மற்றும் அதன்... Read more »

உயிர்வாழ பயிரிடுவோம் செயற்றிட்டம் உரும்பிராயில் ஆரம்பித்துவைப்பு…..! சமூக விஞ்ஞான ஆய்வு மையம் பிரதேச சபையுடன் இணைந்து தொடங்கியது.

சமூக விஞ்ஞான ஆய்வு மையமும் வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளரும் இணைந்து பயிரிடுவோம் உயிர்வாழ்வோம் எனும் திட்டத்தை வலி கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட உரும்பிராய் கிழக்கில் நேற்று பிற்பகல்  5:00 மணியளவில் தொடக்கி  வைத்தனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் ஏற்படக்... Read more »

லிட்ரோ நிறுவனம் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு..!

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. இந்நிலையில் 3950 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுடன் கப்பல் ஒன்று நேற்று நாட்டை வந்தடைந்துள்ளதுடன், நேற்று மாலையே தரையிறக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கமைய இன்றைய தினம் விநியோக பணிகள் வழமைக்கு... Read more »

முறையான பொருளாதார கொள்கை வரைவைக் கொண்டுவரும் வரை நிதியுதவி இல்லை! கை விரித்தது உலக வங்கி.

உலக வங்கி இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்குவதாக வெளியிடப்பட்ட கருத்தை மறுத்துள்ளது. “அடுத்த சில மாதங்களுக்குள் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது” என வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட கருத்தை உலக வங்கி மறுத்துள்ளது. உலகவங்கி... Read more »