தாய்லாந்துக்கு தப்பிச் செல்ல முற்பட்ட வர்த்தகர் கட்டுநாயக்கவில் அதிரடிக் கைது..!

மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தினால் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த வர்த்தகர் ஒருவர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்துக்கு தப்பிச் செல்ல முற்பட்டபோது நேற்று  (27) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 64 வயதான வர்த்தகர் என்பதுடன்  இவர் நேற்று... Read more »

வடக்கில் தகுதி அற்றவர்களுக்கு பதவி வழங்கி கல்வியை அழிக்க முயற்சி – ஜேவிபி சந்திரசேகரன் குற்றச்சாட்டு!

வடக்கு கல்வியில் தகுதியற்றவர்களுக்கும் குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கும் உயர் பதவியை வழங்கி வடக்கு கல்வியை அழிக்கும் முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக தேசிய மக்கள் சக்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றச்சாட்டினார். இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம் பெற்ற... Read more »

தமிழர்களின் குரலை மௌனிக்கச் செய்யும் உச்சபட்ட அடக்குமுறை – வலம்புரி ஆசியர் மீதான விசாரணைக்கு யாழ் வடமராட்சி ஊடக இல்லம் கண்டனம்!

வலம்புரி பத்திரிகையில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தை அடிப்படையாக கொண்டு அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மீது மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பெயரில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தமிழர்களின் குரல்வளையை நெரித்து தமிழர்களின் குரலை மௌனிக்கச் செய்யும் உச்சபட்ச அடக்குமுறையின் வெளிப்பாடாகும். இது தொடர்பில் யாழ் வடமராட்சி ஊடக இல்லம்... Read more »

4 கிலோ தங்கம் என சந்தேகிக்கும் பொருளுடன் மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது

4 கிலோ தங்கம் என சந்தேகிக்கும் பொருளுடன் மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயமருகில் இரவு 11 மணியளவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. விசேட அதிரடிப்படையினர் குறித்த வாகனத்தை சோதனை மேற்கொண்ட போது காரில்... Read more »

கனடாவில் சூரிய கிரகணத்தை பார்வையிட்டவர்களுக்கு கண்களில் பாதிப்பு..!!

கனடாவில் குறித்த மாகாணமொன்றில் கடந்த 8ஆம் திகதி தென்பட்ட சூரிய கிரகணத்தைப் நேரடியாக பார்வையிட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 8ஆம் திகதி தென்பட்ட இந்த அரிய சூரிய கிரகணமானது கனடா, அமெரிக்கா, மெக்சிகோ... Read more »

தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் ஊழியர் பற்றாக்குறை..!

தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் பாரியளவு ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த அலுவலகத்தின் செற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,400 பேர் இருக்க வேண்டிய நிலையில், தற்போது 1,400 அதிகாரிகள் மாத்திரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறைக் காரணமாக கணக்காய்வு அறிக்கைகள் வெளியிடுவதில்... Read more »

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை..!!

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (28) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர்  இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில்... Read more »

புதிதாக திருமணமானவர்களிடையே விவாகரத்து அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிதாக திருமணமானவர்களிடையே விவாகரத்து அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மாவட்ட நீதிமன்றங்கள் வழங்கும் விவாகரத்து வழக்குத் தீர்ப்புகளை அவதானிக்கும் போது, ​​அண்மைக்காலமாக திருமணம் செய்துகொள்பவர்கள் இரண்டு முதல்... Read more »

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை ஜூன் மாதம் கிடைக்கும்

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை கடன் ஜூன் மாதம் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இன்று சனிக்கிழமை (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் கருத்துரைத்த இராஜாங்க... Read more »

எகிப்தில் இருந்து நாட்டுக்கு பெரிய வெங்காயம் இறக்குமதி..?

வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் எகிப்திய தூதுவர் Maged Mosleh  ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. வர்த்தக அமைச்சகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. எகிப்தில் இருந்து  நாட்டுக்கு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அமைச்சர்... Read more »