கஜேந்திரனின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு சிங்கள எம்.பிக்கள் வலியுறுத்து!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, நாடாளுமன்றத்தில் நேற்று ‘எமது தேசியத் தலைவர்’ என்று விளித்தமைக்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எம்.பிக்கு சபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அவரின் உரையை நாடாளுமன்றப் பதிவேடான ஹன்சாட்டில் இருந்து நீக்க... Read more »

பூநகரி பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஆளும் தரப்பினாலேயே தோற்கடிப்பு.

பூநகரி பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலேயே தோற்கடிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு நேற்று பிரதேச சபையில் இடம்பெற்றது. இதன்போது ஆதரவாக 8 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் குறித்த வரவு... Read more »

ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தினரால் யாழில் நேற்று யாகம்….!

ஈழத்தமிழர்களுக்கு இறை ஆசி வேண்டி நேற்றைய தினம்   ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தினரால் சத்துரு சங்கரர்  யாகம் நிகழ்த்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள முருகன் ஆலயம் ஒன்றிலேயே குறித்த யாகம்  ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் பொது செயலாளர் நாயகம் அனந்தி சசிதரனால்  மேற் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில்  அனந்தி... Read more »

தீருவிலில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளரால் அனுமதி மறுப்பு…..!

தீருவில் பொதுப் பூங்காவில் மாவீரர் நாள் நிகழ்வு நடாத்துவதற்கு வல்வெட்டித்துறை நகரசபை தலைவரால்  தடை விதிக்கப்பட்டமைக்கு பலரும் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. தீருவில் பொதுப் பூங்காவில் நிகழ்வை நடாத்துவதற்காக  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  எம்.கே.சிவாஜிலிங்த்துனால்  கோரிக்கை கடிதம் ஒன்று... Read more »

வல்வெட்டித்துறை தீருவிலில் மாவீரர் நாள் நினைவேந்தல்..! அரசியல் தலைவர்கள் முன்னே வாருங்கள், சிவாஜிலிங்கம் அழைப்பு.. |

மாவீரர் நாள் நவம்பர் 27ம் திகதி நினைவுகூரல்களை நடாத்துவது நமது கடமை, அதற்கு அரசியல்வாதிகள் முன்னால் நின்ற செயற்படுவதற்குத் தயாராக இருக்கவேண்டும். என தமிழ்தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.  யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே... Read more »

திருமலை,குறிஞ்சாக்கேணி பாலப்பகுதியில் படகுப்பாதை கவிழ்ந்து விபத்து.

திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலப்பகுதியில் படகுப்பாதை ஒன்று கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு ஒன்றில் ஆற்றை கடக்க முயன்ற 20 மாணவர்களை ஏற்றிய... Read more »

வடமராட்சி கோர விபத்தில் பலியான அத்தாய் இளைஞன்…..!

இரண்டு இரு சக்கர மோட்டார் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதியதில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில்  இளைஞன் ஒருவன் மரணம் அடைந்துள்ளான். மேலும் இருவர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ் போதானா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை இரவு 8-00 மணியளவில்... Read more »

கொலை வாளின் கீழ் ஊடக பணியாற்றியவர் சிரேஸ்ட ஊடகவியலாளர் அமரர் கானமயில்நாதன்! யாழ்.ஊடக அமையம் இரங்கல்.. |

விடுதலைப் போராட்டத்தின் சத்தமற்ற ஊடக சாட்சியங்களுள் ஒன்றாக இருந்து மறைந்த மூத்த ஊடகவியலாளர் ம.வ.கானமயில்நாதன் அவர்களிற்கு யாழ்.ஊடக அமையம் தனது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்வதாக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஊடக பரப்பில் உரிமை கோரப்படாத மரணங்களும் காணாமல் ஆக்கப்படுதல்களும்... Read more »

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மீண்டும் கனமழை! வடமாகாணத்திற்கு நெருக்கமாக வரும் புதிய தாழமுக்கம். நா.பிரதீபராஜா.. |

இலங்கையின் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் புதிய தாழமுக்கம் ஒன்று உருவாவதாக யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா கூறியிருக்கின்றார்.  இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, புதிய தாழமுக்கம் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 26.11. 2021 வியாழக்கிழமை, 27.11.2021 வெள்ளிக்கிழமை... Read more »

யாழ்.பருத்தித்துறையில் பனை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு!

யாழ்.பருத்தித்துறை – இமையாணன் பகுதியில் பனை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் உடுப்பிட்டியை சேர்ந்த ந.ஜெயராசா (வயது 48) என்ற தொழிலாளியே உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை பனை மரத்தில் ஏற்றி கள்ளு சீவிக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்துள்ளார்.... Read more »