அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்புகளில் 20 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒரு மதுபான சுற்றிவளைப்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 68 லீற்றர் மதுபானம், ஒரு எரிவாயு சிலிண்டர், ஒரு எரிவாயு... Read more »

யாழ். அனலைதீவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இருவர் கைது!

யாழ். அனலைதீவு பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 20 மஞ்சள் மூடைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று அதிகாலை 3 மணியளவில் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதில் அனலைதீவு மற்றும் நாவற்குழி... Read more »

முஸ்லிம் எம்.பிக்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அனுப்பப்பட்டுள்ள கடிதம்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் குற்றவியல் நடவடிக்கை உள்ளாக்கப்பட வேண்டியவராக குற்றம் சாட்டப்பட்டுள்ள தேரரை அரச ஊடகம் எவ்வாறு அழைத்து இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லிம்களுக்கு எதிராக பேச வைத்தது என முன்னாள் கிழக்கு மாகாண சபை... Read more »

ஒன்லைன் வகுப்பிற்கு செல்லாத மாணவனை அடித்துக் கொன்ற தந்தை.

தென்னிலங்கையில் தந்தை ஒருவர் மகனை படிப்பதற்காக கண்டித்தமையினால் ஏற்பட்ட காயம் காரணமாக மகன் உயிரிழந்துள்ளார். காலி, மஹமோதர, சியம்பலாஹேன பிரதேசத்தை சேர்ந்த கிம்ஹான் விமுக்தி என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். அவர் இம்முறை சாதாரண பரீட்சைக்கு ஆயத்தமாக இருந்தவராகும். குறித்த மாணவன் சில மாதங்களாக ஒன்லைன்... Read more »

ஞானசார தேரரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட மாட்டாது – பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு.

எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டில் அடிப்படைவாத தாக்குதல் நடத்தப்படலாம் என ஊடகங்களுக்கு கூறியமை சம்பந்தமாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட மாட்டாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எந்த வகையிலும் ஞானசார... Read more »

ஹிஷாலினி உயிரிழப்பு விவகாரம் – ரிஷாத்திற்கு இன்று வழங்கப்பட்டுள்ள உத்தரவு

முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரிஷாத் வீட்டில் பணியாற்றி வந்த ஹிஷாலினி என்ற சிறுமி தீக்காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்றைய தினம் கொழும்பு... Read more »

இலங்கைக்கு நேரடி பயணங்கள் மேற்கொள்ளவுள்ள 7 சர்வதேச விமான சேவைகள்

லங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு 7 விமான நிறுவனங்கள் தயாராக உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த நிறுவனங்களில் 5 நிறுவனங்கள் தற்போது வரையிலும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கள் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின் விமான நிறுவனங்கள்... Read more »

கிளிநொச்சி மாவட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில், சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி ஏற்றும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் என்.சரவணபவனின் கண்காணிப்பின் கீழ், மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் மாதாந்த சிகிச்சை, உளநலசிகிச்சைக்கு செல்லும் சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசியேற்றும் நடவடிக்கைகள்... Read more »

நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் சுகாதார வழிமுறைகளைத் தொடர்ந்தும் முறையாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு மக்கள் அதனைப் பின்பற்றாவிட்டால் மிக மோசமான விளைவுகளை மீண்டும் எதிர்கொள்ள நேரிடும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவரும் விசேட வைத்திய நிபுணருமான... Read more »

எமது பிள்ளைகள் இழந்துள்ள அனைத்து எதிர்பார்ப்புகளையும் மீளப் பெற்றுக்கொடுப்பதே அரசின் முதல் கடமை!

சர்வதேச சிறுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு உரித்தான குழந்தைப் பருவத்தை அவர்கள் சுதந்திரமாக அனுபவிக்க இடமளிக்குமாறு, கேட்டுக் கொள்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்காலத்தில் உலகம் முகங்கொடுத்திருக்கும் தொற்றுப்பரவலுக்கு மத்தியில், அனைத்துச் சிறுவர் சமுதாயத்தினதும் எதிர்பார்ப்புகளுடன்கூடிய சிறுவர் உலகத்துக்கான வரையறைகள்... Read more »