கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் காணப்படுகின்ற பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு சொத்துரிமையாளர்களிடம் கொழும்பு நகராட்சி ஆணையாளர் சட்டத்தரணி திருமதி ரோஸனி திஸாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார். சொத்துக்களின் உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு சொத்துக்களை நகர சபையில் பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம்... Read more »
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பண்டாரநாயக்கவின் பெயரை விற்று பிழைப்பு நடத்தியதை மாத்திரமே செய்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்கவின் நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர்... Read more »
தியாக தீபம் திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்றைய தினம் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் திலீபன் மரணமடைந்த நேரமான 10.48 மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.... Read more »
வவுனியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொரோனாத் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 6 பேர்... Read more »
“இளையோர்கள் எமது நம்பிக்கை நட்சத்திரங்கள். உங்களிடம் எமது மக்கள் நிறைய எதிர்பார்க்கின்றார்கள். உங்கள் செயற்பாடுகளை நிறுவன மயப்படுத்தி அறிவை ஆயுதமாகப் பயன்படுத்தி எமது விடிவுக்காக நீங்கள் நிறையவே சாதிக்க முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.” இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட... Read more »
வடமராட்சி – தொண்டமானாறு கடல் நீரேரியில், முதியவர் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீன் பிடிக்க சென்றவர்கள் சடலம் மிதப்பது தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியிருந்தனர். இதனையடுத்து குறித் இடத்திற்கு விரைந்த பொலிஸார், முதியவரின் சடலத்தை மீட்டனர். 80 வயது மதிக்கத்தக்க... Read more »
லங்கா சதொச நிறுவனத்துக்குரிய 54 ஆயிரம் கிலோகிராம் வெள்ளைப்பூடு அடங்கிய 2 கொள்கலன்களை துறைமுகத்திலிருந்து வெளியேற்ற நிதி உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான வர்த்தகர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் ஹேசாந்த டீ மெல்... Read more »
இலங்கையில் பரவிவரும் டெல்டா கொவிட் திரிபின் பிறழ்வுகளுக்கு உத்தியோகபூர்வமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. சிறீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்திர தமது ட்விட்டர் கணக்கில் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, 701- S என்ற... Read more »
நாடளாவிய ரீதியில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று (26) மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில், பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் தலைமையகம் இன்று (26) விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக மதுபான சுற்றிவளைப்பொன்றில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 15 லீற்றர்... Read more »
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்கட்டு கொட்டு ,ஜீவபுரம், ஜிம்றோன் நகர் ,சாந்திபுரம் போன்ற கிராமங்களில் ஒரு சில மீனவர்கள் வீதிகளில் தாங்கள் மீன் பிடிக்க பயன்படுத்தும் மீன்பிடி வலைகளை பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது வீதிகளில் உலர விடுவதினால் தொடர்ச்சியாக விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. பல... Read more »