யாழ்.பருத்தித்துறையில் 1 வயதான பெண் குழந்தை கொரோனா தொற்றினால் உயிரிழப்பு! |

யாழ்.பருத்தித்துறையில் ஒரு வயதான பெண் குழந்தை கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. மயூரன் தனுசியா என்ற ஒரு வயதும் 3 மாதமும் நிரம்பிய பெண் குழந்தை புரையேறிய நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. இதனையடுத்து... Read more »

யாழ்.பருத்தித்துறை திக்கத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் உட்பட 4 கொரோனா மரணங்கள் பதிவு!

யாழ்.பருத்தித்துறையில் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி உடுப்பிட்டியை சேர்ந்த ஒரு வயதும் 3 மாதங்களும் நிரம்பிய குழந்தை புரையேறிய நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோல் மந்திகை... Read more »

யாழ்.மாவட்டத்தில் தொடரும் அபாயம்! மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று, 4 கொரோனா மரணங்கள் பதிவு.. |

யாழ்.மாவட்டத்தில் மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்டத்தின் கொரோனா அனர்த்த நிலைமை தொடர்பான நாளாந்த நிலவர அறிக்கையில் தொிவிக்கப் பட்டிருக்கின்றது.  இதன்படி பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 27 பேருக்கும், அன்டிஜன் பரிசோதனைகளில் 124 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதேவேளை... Read more »

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு!

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் அருந்தாமல் அகிம்சை வழியில் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகி திலீபன் அவர்களின் 34 ஆவது ஆண்டு நினைவு நாளின் தொடக்க நாளான இன்று கிளிநொச்சியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட... Read more »

லங்கா ஹொஸ்பிடல்ஸ் கைக்குண்டு தொடர்பில் உப்புவெளியை சேர்ந்தவர் கைது |

கொண்டு வரப்பட்டது எதற்காக; விசாரணை தொடர்கிறது நாரஹேன்பிட்டியில் உள்ள லங்கா ஹொஸ்பிடல்ஸ் தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் திருகோணமலை, உப்புவெளியில் வசிக்கும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.... Read more »

உள்ளாடை இல்லையென்றால் எவரும் உயிரிழக்க மாட்டார்கள் – அமைச்சர் சர்ச்சை கருத்து..!

 நாட்டில் உள்ளாடைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரித்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அவற்றை ச.தொ.ச ஊடாக விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உள்ளாடைகள் இல்லை என்றால் எவரும் உயிரிழந்துவிட மாட்டார்கள் என இராஜாங்க அமைச்சர்... Read more »

மேலும் 132 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 11,699 கொவிட் மரணங்கள்.

– 66 ஆண்கள், 66 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 101 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 132 மரணங்கள் நேற்று (14) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »

கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் குறித்து ஐ.நா அதிருப்தி!

அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாக, ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். சிறைக்கைதிகள் தவறான முறையில் நடத்தப்படுவதை வன்மையாகக்... Read more »

இலங்கையின் திருமதி அழகு ராணியான புஷ்பிகா டி சில்வாவும் அங்கு இருந்துள்ளாரா….???

கடந்த 12ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலையில் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவம் தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வந்த நிலையில் லொகான் ஆர்வத்தை தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவ்வாறானதொரு... Read more »

தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர்.

தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர் நல்லூர் பின் வீதியில் திலீபனின் நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள்... Read more »