ஜனாதிபதியின் ஐ.நா. உரை வெற்றுப் பேச்சு! – கஜேந்திரகுமார்

“தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பல எண்ணிக்கையிலான புலம்பெயர் தமிழ் அமைப்புகளைத் தடை செய்துவிட்டு, தற்போது உள்ளகப் பொறிமுறையில் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக கலந்துரையாட வருமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு ஐ.நாவில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுப்பது வெற்றுப் பேச்சே.” -இவ்வாறு தமிழ்த் தேசிய... Read more »

பளையில் சிறுவன் மீது சரமாரியான தாக்குதல். சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதி….!

கிளிநொச்சி மாவட்டம்  பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் குடும்ப தகராறு காரணத்தால் ஏற்பட்ட முரண்பாட்டில் 14வயது சிறுவன் ஒருவன் மீது  கடுமையான  தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. பளை முல்லையடி கிராமத்தில் சில காலமாகவே தனிநபர் ஒருவர்  கிராமத்தில் தொடர்ச்சியாக பல்வேறு நபர்களுடன் தகராறுகளில் ஈடுபட்டு... Read more »

சும்திரனின் துரோகத்தால் கூட்டமைப்பிடமிருந்து பறிபோனது வல்வெட்டித்துறை நகரசபை…எம்.கே.சிவாஜிலிங்கம்.

சுமந்திரனின் துரோகத்திற்கு உறுப்பினர் ஒருவர் விலைபோனதால் வல்வெட்டித்துறை நகரசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி வீழ்த்தப்பட்டது என தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சாட்டினார். யாழ்.வல்வெட்டித்துறை நகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருந்து ஆட்சி போனது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்... Read more »

நாகர்கோவில் படுகொலை நினைவு உயர்ந்தார் எம் கே சிவாஜிலிங்கம்….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலய பாடசாலை மீது 1995ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் திகதி இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுவீச்சித் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்கள் உட்பட 39 பேரின் 26ஆம் ஆண்டு நினைவேந்தல் பிற்பகல் தமிழ் தேசிய கட்சி... Read more »

நானாட்டான் நறுவிலிக்குளம் பகுதியில் 68 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்பு….!

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம்-நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 68 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை நேற்று செவ்வாய்க்கிழமை (21) மாலை வங்காலை கடற்படையினர் மீட்டுள்ளனர். -வங்காலை கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை... Read more »

மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், தமிழ்த் தேசியப் பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் காலமானார்.

திடீர் சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 80 வயதான மூத்த ஊடகவியலாளர் பீ.ஏ.அந்தோனி மார்க், மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார். குரலற்ற மக்களின் குரலாகவும் குறிப்பாக... Read more »

லைக்கா ஞானம் அறக்கட்டளையினால் 1000 குடும்பங்களிற்கு உலருணவுப்பொதி வழங்கி வைப்பு….!

லைக்கா ஞானம் அறக்கட்டளையினால் 1000 குடும்பங்களிற்கு உலருணவுப்பொதி வழங்கி வைக்கப்பட்டது. இன்று காலை 10.30 மணியளவில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் மக்களிற்கு முதல் கட்டமாக குறித்த பொருட்கள் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன், கிராமசேவையாளர்,... Read more »

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா…!

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா தெரிவாகியுள்ளார். ஒரு மேலதிக வாக்கினால் அவர் வெற்றிபெற்றார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ரெலோ உறுப்பினர் சதீஸ் 8 வாக்குகளையும் சுயேட்சைக் குழுவின் சார்பில் போட்டியிட்ட செல்வேந்திரா 9 வாக்குகளையும் பெற்றனர்.... Read more »

நாகர்கோவில் படுகொலையின் 26 வது நினைவேந்தல்….!

 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலய பாடசாலை மீது 1995ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் திகதி இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுவீச்சித் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்கள் உட்பட 39 பேரின் 25 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டது.... Read more »

ஜனாதிபதி ஐ.நாவிலிருந்து வந்து கைதிகளை விடுவித்தாலும் ஆச்சரியமில்லை – அசோக அபேசிங்க –

ராஜபக்ச அரசு சங்கைக்குரிய தேரர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க (Ashok Abeysinghe) குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், 2020ஆம்... Read more »