மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளதால் 16,000 கோடி ரூபாய் நட்டம்…!

தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளதால் அரசாங்கத்துக்கு 16,000 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக, மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார். நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்ட 20 ஆம் திகதி முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்ளேயே இந்த நட்டம்... Read more »

பாதுகாப்பாக இருங்கள்” எனும் தொனிப்பொருளில் கொவிட் ஒழிப்பு வேலைத்திட்டம் கிளி ஊடக மையம் ஆரம்பித்தது….!

பாதுகாப்பாக இருங்கள்” எனும் தொனிப்பொருளில் கொவிட் ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று கிளிநொச்சி ஆரம்பமானது. கிளிநொச்சி ஊடக மையத்தினால் ஆரம்பிக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டமாானது இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமானது.  கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்த சுகாதார துறையினர், ஊடகவியலாளர்கள், சமூக சேவையாளர்கள், பொதுமக்களின் ஆத்ம சாந்திக்கான விசேட... Read more »

வெளிநாட்டு தூதுவர்களுடன் நிதி அமைச்சர் பசில் சந்திப்பு! –

இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் அதற்குத் தேவையான சர்வதேச ஒத்துழைப்புகள் தொடர்பில் இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது. நாட்டில் உள்ள 43 வெளிநாட்டு தூதர்களில் 35 வெளிநாட்டு... Read more »

யாழில் திருமண கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நேர்ந்துள்ள கதி…!

யாழ். காரைநகரில் சுகாதார நடைமுறைகளை மீறி திருமணச் சடங்கு ஒன்றில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன. காரைநகர், அல்வின் வீதியில் கடந்த புதன்கிழமை குறித்த திருமண நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அது தொடர்பான ஒளிப்படங்கள் சமூக... Read more »

மட்டக்களப்பில் மீனவரின் படகிற்கு தீ வைத்த விசமிகள் – விசாரணை ஆரம்பம்.

மட்டக்களப்பு – பெரிய உப்போடை, லேக் வீதியில் உள்ள களப்பு பகுதியில் மீனவரொருவரின் படகிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியான படகு, வலை என்பன தீயில் முற்றாக கருகியுள்ளதாக தெரியவருகிறது. இன்று அதிகாலை 4 மணியளவில் தொழிலுக்கு செல்வதற்கு மீனவர்கள்... Read more »

இலங்கையில் கடன் பெற்றவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு –

கடன் பெற்றவர்களுக்கான சலுகைக்காலத்தை நீடிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் நிலவும் கோவிட் தொற்று பரவல் நிலை மற்றும் இதனால் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதன்படி குறித்த விடயங்களால் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்கள் மற்றும்... Read more »

மக்களை அடக்கி ஆழவே அவசரமாக சட்டம்…!சி.வி.

தமக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ ஆயத்தமாகின்றார்கள் என்பதை அறிந்துகொண்டு அவர்களை அடக்கி ஆள அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உபயோகித்துள்ளார். இது சர்வாதிகாரத்துக்கு முக்கிய படி என்பதில் எந்தவித ஐயமும் இருக்க முடியாது.” – இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர்... Read more »

இன்று 3,644 பேருக்குக் கொரோனாத் தொற்று…!

நாட்டில் இன்று 3 ஆயிரத்து 644 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதையடுத்து நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 51 ஆயிரத்து 401 ஆக எகிறியுள்ளது. இதேவேளை, கொரோனாத்... Read more »

வவுனியாவில் மேலும் 148 பேருக்குத் தொற்று; இருவர் மரணம்!

வவுனியாவில் மேலும் 148 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் மரணமடைந்துள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் முடிவுகள்... Read more »

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 739 பேர் கைது…!

கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் நாடளாவிய ரீதியில் 739 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது 70 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் இதுவரை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 64,647 ஆக... Read more »