திங்கட்கிழமையின் பின்னரான நாட்டின் முடக்கநிலை குறித்து இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி தகவல்.

எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னர் நாட்டை மீண்டும் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாடோபுள்ளே தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற... Read more »

வர்ணம் பூசும் பணிகளை நிறுத்துமாறு யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பணிப்பு..! |

யாழ்.மாநகரசபைக்குட்பட்ட பிள்ளையார் குளத்தின் சுற்றுவட்டத்திற்கு தீட்டப்பட்ட வர்ணம் தொடர்பான சர்ச்சைகளை தொடர்ந்து வர்ணம் தீட்டும் பணிகளை நிறுத்துமாறு யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பணித்துள்ளார். உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் புனரமைக்கப்பட்ட யாழ்.பிள்ளையார் குளம் அண்மையில் அமைச்சர் நாமல் ராஜபக்ச வருகை தந்து பார்வையிட்டுச் சென்றார்.... Read more »

பட்டதாரிகளின் பயிற்சி காலம் குறித்து அமைச்சர் டளஸ் கருத்து!

பட்டதாரிகளின் பயிற்சி காலத்தை மேலும் 6 மாதத்தால் நீடிப்பதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பயிற்சி... Read more »

நாடு கடன்பொறிக்குள் சிக்குண்டுள்ளது- அஜித் சுந்தர –

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு நாம் அனைவரும் முகங்கொடுத்துள்ள நிலையில், நாடானது பாரியளவிலான கடன் பொறிக்குள் சிக்குண்டுள்ளது. 2019ஆம் ஆண்டின் மத்திய வங்கி அறிக்கைக்கு அமைவாக இந்நாட்டின் அரசாங்கம் என்ற முறையில் வெளிநாட்டுக் கடனானது டொலர் பில்லியன் 55,916 ஆகக் காணப்பட்டுள்ளது. இன்று 2021... Read more »

அசாத் சாலியின் பிணை விண்ணப்பக் கோரிக்கை நீராகரிப்பு! –

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணை விண்ணப்ப கோரிக்கை, கொழும்பு நீதிமன்றத்தினால் நீராகரிக்கப்பட்டுள்ளது.மாவனெல்லையில் புத்தர் சிலை உடைப்பு சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன், உறவு வைத்திருந்த குற்றச்சாட்டில், அசாத் சாலிக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த நிலையில்,... Read more »

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 07 ஆம், 08 ஆம், 09 ஆந் திகதிகளில்…!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 07 ஆம், 08 ஆம், 09 ஆந் திகதிகளில், பல்கலைக் கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. நாட்டில் இப்போதுள்ள கொரோனா – தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமைகள் நீடிக்குமாயின்,... Read more »

கொழும்பில் பரபரப்பு: தனியார் வைத்தியசாலை ஒன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு!

கொழும்பு – நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வைத்தியசாலையின் முதலாம் மாடியிலுள்ள கழிப்பறையொன்றிலிருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட கைக்குண்டை பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், சம்பவம்... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் 40 ஆயிரம் பேருக்கு இரண்டு கட்டத் தடுப்பூசிகள்….

கிளிநொச்சி மாவட்டத்தில் 40 ஆயிரம் பேருக்கு இரண்டு கட்டத் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி  மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சரவணபவன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதேவேளை, 60... Read more »

மன்னார் தாராபுரம்  துருக்கி சிட்டி  பகுதியில் அமைந்துள்ள கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்திற்கு ஒரு தொகுதி அத்தியாவசிய பொருட்கள் கையளிப்பு

மன்னார் தாராபுரம் துருக்கி சிட்டி   பகுதியில் அமைந்துள்ள கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா தொற்றாளர்களிற்கதகாக  அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் நூறு மற்றும் சுகாதார பொருட்கள் உள்ளடங்களாக ஒரு தொகுதி பொருட்கள் இன்றைய தினம் (14) செவ்வாய்க்கிழமை... Read more »

குளத்திற்கு பௌத்த கொடியை ஒத்ததாக வர்ணம்! கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் நாமல் பார்வையிட்டிருந்தார்.. |

யாழ்.பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் குளம் புனரமைப்பு செய்யப்படும் நிலையில் குளத்தை சுற்றி புதிதாக கட்டப்பட்டிருக்கும் பாதுகாப்பு சுவர்களில் பௌத்த கொடியை ஒத்த வர்ணம் தீட்டப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் மீளப் புனரமைக்கப்பட்டுவருகின்ற குளத்தில் சுற்று கம்பங்களுக்கு இவ்வாறு பௌத்த... Read more »