யாழ்.மாவட்டத்தில் 64 பேர் உட்பட வடக்கில் 114 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்.மாவட்டத்தில் மேலும் 64 பேர் உட்பட வடமாகாணத்தில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சுமார் 687 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.மாவட்டத்தில்... Read more »

3 வகையான டெல்டா வகை திரிபு வைரஸ் தொற்றுடன் பெண் ஒருவர் இலங்கையில் அடையாளம்…!

இலங்கையில் 3 வகையான டெல்டா திரிபு வைரஸ் தொற்றுள்ள பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றார். உலகில் டெல்டாவின் மூன்று திரிபுகளுடன் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளமை இதுவே முதல் முறையாகும். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக தொற்று நோய் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த... Read more »

அறுபது ஆண்டுகளுக்கு மேலாக திருத்தப்படாத நாகர்கோவில் எழுதுமட்டுவாள் வீதி….!

யாழ் வடமராட்சி கிழக்கில் நாகர்கோவில் சந்தி ஊடாக தென்மராட்சி எழுதுமட்டுவாளை இணைக்கின்ற வீதி சுமார் ஆறுபது ஆண்டுகளுக்கு மேலாக திருத்தப்படாமல் காணப்படுகிறது. ஒருவருடத்தில் ஆறுமாதங்கள் பயணிக்க கூடியதாகவும் ஆறுமாதங்கள் பயணிக்க முடியாதவாறு மழை வெள்ளம் தேங்கிக் காணப்படும் குறித்த வீதியானது குடத்தனை, அம்பன், நாகர்கோவில்... Read more »

பொது முடக்கம் தொடர்பில் ஜனாதிபதி செயலக அறிக்கை…!

நாட்டில் கோவிட் தொற்றானது தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கை முடக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மற்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆகியோர் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் நாடளாவிய ரீதியிலான முடக்கம் அமுல்படுத்தப்படுவதற்கான காரணம்... Read more »

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்! சுகாதார சேவைகள் பணிப்பார் வெளியிட்டுள்ள தகவல் –

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் உடனடியாக அதாவது ஓரிரு தினங்களில் நாட்டில் தற்போதுள்ள நிலைமை சீராகும் என்று கருத முடியாது  என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து... Read more »

நாட்டில் வர்த்தகர்கள் சுய முடக்கம் அறிவித்ததை வரவேற்பதாக இராணுவ தளபதி வரவேற்பு….!

நாட்டின் பல பகுதிகளில் வர்த்தகர்கள், பொதுமக்கள் சுய முடக்கம் அறிவித்துள்ளமையைினை தாம் வரவேற்பதாக கூறியிருக்கும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா,  வர்த்தக நிலையங்கள் சுயமாகவே மூடப்பட்டுள்ளதால் மக்கள் பொருள் கொள்வனவுகளுக்காக வேறு நகரங்களுக்கு செல்வார்களாயின், அந்த திட்டத்தின் எந்தவித பயனும் கிடையாது. எனவும்... Read more »

போலி இலக்கத் தகட்டுடனான காரொன்றை தம்புள்ளையிலிருந்து கைப்பற்றியுள்ள பொலிஸார்…!

போலி இலக்கத் தகட்டுடனான காரொன்று இன்று காலை தம்புள்ளையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்துள்ளார். கடந்த 16ஆம் திகதி காத்தான்குடி பொலிஸ் பிரிவில் போலி இலக்கத்தகட்டுடான கார் ஒன்றை காத்தான்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் அதே இலக்கத்தில்... Read more »

கொரோனா தொற்றுக்குள்ளான 3,676 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3,676 பேர் நேற்று (18) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 365,683 இலிருந்து 369,359 ஆக அதிகரித்துள்ளது. அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம்... Read more »

டயர்களை வைத்து கோவிட் சடலங்களை ஒன்றாக எரிக்கத் தீர்மானம்!

பாணந்துறை ஆதார வைத்தியசாலைகளில் கோவிட் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் குறித்த சடலங்களை ஒன்றாக இட்டு தகனம் செய்ய அவதானம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை நகர சபை தலைவர் நந்தன குணதிலக்க இதனை தெரிவித்துள்ளார். டயர்களை வைத்து விறகுகளால் சடலங்களைத் தகனம் செய்யக்கூடிய... Read more »

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த நிலையில் வீடு திரும்பிய நபர் வீட்டிலேயே உயிரிழப்பு! |

பண்டாரவளை – சமகி மாவத்தை பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணடைந்து வீடு திரும்பிய நபர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். 62 வயதுடைய அதே பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் கிராம உத்தியோகத்தர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் பதுளை பொது வைத்தியசாலையின் கொவிட் சிகிச்சை பிரிவில் சிகிச்சை... Read more »