இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவுக்கு கொவிட்-19 தொற்று |

இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மகளுக்கு மேற்கொண்ட PCR சோதனையில் கொவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) அவர் தனது Facebook கணக்கில் இடுகையொன்றின் மூலம் தெரிவித்திருந்ததோடு, அதனைத் தொடர்ந்து தானும் தனது குடும்பத்தினரும்... Read more »

எல்லை தாண்டிய இந்திய இழுவை படகுகளால் தொடர் பாதிப்பு, பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் நாளாந்தம் இழப்பு….!

வடமராட்சி கடற் பிரதேசத்தில் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளை இழந்து வருவதாக வடமராட்சி பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர். பல வருடங்களாக இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி நாளாந்தம் வடமராட்சி கடற்பரப்பில் இழுவை மடி தொழிலில் ஈடுபடுவதால் கடல்... Read more »

தருமபுரம் முசுரம்பட்டி கிராமத்தில் வீட்டுத்திட்ட உள்ளக வீதிகளில் வெடிப்பு, மக்கள் விசனம்…!

கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட தருமபுரம் முசுரம்பட்டி கிராமத்தில் வீட்டுத்திட்ட உள்ளக வீதிகள் கடந்த 2020/01/20 அன்று நிர்மானிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ் வீதிகளில் சில வீதிகள் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பூரணப்படுத்தப்பட்ட கொங்றீட் வீதிகள் வெடிப்படைந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். புதிதாக நிர்மானித்துள் கொங்றீட்... Read more »

அர்ப்பணிப்புடன் செயலாற்றும் மருத்துவ பணியாளர்களை மன உழைச்சலுக்கு உள்ளாக்காதீர்கள். சி.சிறிதர்ன பா.உ…!

உயிர் அர்ப்பணிப்புடன் செயற்படும் கிளிநொச்சி வைத்தியர்கள், சுகாதார பணியாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கொரோனா காலப்பகுதியில் தம்மை அர்பணித்து பணியாற்றும் கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள் சுகாதார பணியாளர்கள் நிலமை தொடர்பா ஆராய்வதற்கு இன்றைய தினம் யாழ்... Read more »

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்….!

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொரோனா தொற்று காரணமாக சற்றுமுன் மரணமடைந்தார். 65 வயதுடைய இவர் கடந்த ஒரு வாரமாக கொழும்பு தனியார் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் மரணமடைந்தார். Read more »

உலக சுகாதார நிறுவனத்தின் கோரிக்கை…!

தடுப்பூசி ஏற்றத்தாழ்வை சுட்டிக்காட்டி மூன்றாவது டோஸ் திட்டங்களை ஐரோப்பிய நாடுகள் நிறுத்திவைக்குமாறு உலக சுகாதார மையத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே கடந்த மாதமும் அவர் இதுபோன்றதொரு கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், அந்த கோரிக்கையை முன்வைக்கும்போதே இஸ்ரேல் மூன்றாவது டோஸ் செலுத்தும்... Read more »

தனது ஒரு மாத சம்பளத்தை கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு வழங்கிய அங்கஜன்…!

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அங்கஜன் இராமநாதன் தனது ஒரு மாத சம்பளத்தை கொவிட்19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு வழங்கியிருக்கின்றார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கும் போது தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது நாடு... Read more »

யாழ்.மாவட்டத்தில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவானது! 200ஐ தாண்டிய மொத்த எண்ணிக்கை.. |

யாழ்.மாவட்டத்தில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஊர்காவற்றுறையை சேர்ந்த 83 வயதான பெண் ஒருவரும், யாழ்.ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவரும், யாழ்.மானிப்பாய் வீதியை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவருமாக... Read more »

அகதிகள் என்ற பெயரில் போராளிகள்; புடின் விமர்சனம்…!

ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் சீனா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில் ரஷ்யாவும் தற்போது கருத்து தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இதுகுறித்து கூறுகையில், ஆப்கானிஸ்தானில் தற்போது... Read more »

மட்டக்களப்பில் 24 மணி நேரத்தில் 141 தொற்றாளர்கள் அடையாளம் -!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்கள் 141 நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் ஐந்து மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த ஒருவார காலப்பகுதியில் 2322 கொவிட் 19 வைரஸ்... Read more »