
யாழ்.உரும்பிராய் பகுதியில் வீடொன்றின் மீது வன்முறை கும்பல் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. சம்பவத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். Read more »

அடுத்துவரும் 6 வாரங்கள் இலங்கைக்கு ஆபத்துமிக்கது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். எனவே சுகாதார வழிக்காட்டில்களை பின்பற்றி மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். ஊடகங்களின் பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.... Read more »

முகக்கவசம் அணியும் சட்டத்தை நாட்டில் இன்று முதல் கடுமையாக அமுல்படுத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2020, அக்டோபர் 17ஆம் திகதி தனிமைப்படுத்தல் மற்றும்... Read more »

சர்வதேச யானைகள் தினத்தினை முன்னிட்டு , யானைகள் தொடர்பான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முயற்சியினை யாழ்ப்பாணத்தை சேர்ந்த மனோகரன் சசிகரன் ஏற்பாடு செய்திருந்தார். உலக யானைகள் தினமான நேற்றைய தினம் வியாழக்கிழமை சிறுவர்கள் யானை முகமூடி அணிந்து , யானைகளை பாதுகாப்போம் என... Read more »

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றின் கிளையில் 8 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் வங்கி நிர்வாகம் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பிலான அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த வங்கியின் ஊழியர்கள் சிலருக்கு கடந்த... Read more »

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 48 வீதம் அதிகரித்துள்ளதாகவும் இந்த மாதம் மிகவும் ஆபத்தானது எனவும் ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 30 வீதமாக அதிகரித்துள்ளது. காணப்படும் நிலைமையை மக்கள் நன்றாக உணர்ந்து அத்தியாவசிய காரணங்களுக்காக அன்றி வீட்டில்... Read more »

கோவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்ட அதாவது இரண்டு மாத்திரைகளையும் ஏற்றிக் கொண்ட தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திரா சில்வா அறிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதி முதல் தடுப்பூசி அட்டைகளை வைத்திருப்பது காட்டாயமாக்கப்பட்டுள்ளது.... Read more »

ஆயுள்வேத சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெறும் எந்தவொரு கொரோனா நோயாளியும் இதுவரை உயிரிழக்கவில்லை. என ஆயுள்வேத விவகாரங்கள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தம்மிக அபேகுணவர்த்தன கூறியுள்ளார். நேற்று குருநாகலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்த அறிக்கைககள் வெளியிடப்பட்டன. கடந்த 45 நாட்களில் 3820 கொவிட்... Read more »

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில் ஆலயத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டோர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நல்லூர் ஆலய முன்பக்க பருத்தித்துறை வீதியில் கோயில் நிர்வாகத்தினரின் உத்தரவில் பொலிசாரின் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொடியேற்ற நிகழ்வினை பார்க்காதவாறு தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு... Read more »

யாழ்.நகரில் உள்ள அஞ்சலகத்தில் பணியாளர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் குறித்த பணியாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். மேலும் அவர்களிடம் பீ.சி.ஆர் மாதிரிகளும் பெறப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது Read more »