இரண்டு தடுப்பூசிகளும் போட்டவர்கள் இலங்கை வரலாம்…!

இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட இலங்கையர்கள், இந்தியாவிலிருந்து நாட்டுக்குள்  நுழைவதற்கு வெளிவிவகார அமைச்சின் முன் அனுமதி தேவையில்லை என சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.   அவர்கள் வந்தவுடன் விமான நிலையத்தில் பிசிஆர் சோதனை செய்ய வேண்டும்.முதலாவது பிசிஆர் சோதனையில் தொற்று இல்லையென... Read more »

அபாயத்தை உணர்ந்து செயற்படுங்கள்: கிளிநொச்சி மக்களிடம் கோரிக்கை!

நாளுக்கு நாள் மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே பொது மக்கள் இந்த நெருக்கடியை உணர்ந்துகொண்டு செயற்படதவறின் பேரிழப்புக்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.   கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது... Read more »

மனைவி, பிள்ளைகள் மாயம்: கணவன் முறைப்பாடு!

வவுனியா பூந்தோட்டம் 1ம் ஒழுங்கை, மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் சற்குணசிங்கம் தமிழினி மற்றும் பிள்ளைகளான டனிஸ்கா, கனிஸ்கா ஆகியோர் வீட்டில் தனிமையில் இருந்த நிலையில் காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் குடும்பத்தினருடன் கணவர், மனைவி, இரு... Read more »

வவுனியாவில் 84 பேருக்கு கொரோணா தொற்று….,!

வவுனியாவில் 84 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.   வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று வெளியாகின. அதில் நெளுக்குளம் பகுதியில்... Read more »

நீங்களும் செய்தியாளராகலாம்…!

உங்கள் பிரதேசத்தில் இடம் பெறும் நிகழ்வுகள், பிரச்சினைகள், விளையாட்டு,மற்றும் கலை கலாசார நிகழ்வுகள், செய்திகள், கட்டுரைகளை எமக்கு அனுப்பி வையுங்கள்.அவற்றை நாம் பிரசுரிகக தாயராக உள்ளோம். உங்கள் பெயர், தொலைபேசி இலக்கங்களை தவறாது பதிவிடுங்கள் தொடர்பு:: elukainews@gmail.com 0740571111 Read more »

கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதனுக்கு கொரோனாத் தொற்று… !

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரைச்சிப் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளமை நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டிருந்தது. அதன் தொடராக அவருடன் தொடர்பிலிருந்த செய்தியாளர் ஒருவருக்கு அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி... Read more »

நாட்டை முடக்குவது பற்றி பேசாதீர்கள்.இராணுவ தளபதி.!

நாட்டை முடக்குவது பற்றி பேசாதீர்கள். அது குறித்து பேசாமல் நாட்டை முடக்காமல் நெருக்கடி நிலையை வெற்றி கொள்வது குடிமக்களின் கடமையாகும். என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.  இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,... Read more »

வடக்கின் உயர்நிலை அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று! |

வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனா கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மாகாணத்தின் உயர்நிலை அதிகாரிகள் மேலும் 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் கூறுகின்றன.  இதேபோல் வடமாகாண பிரதம செயலாளரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் வடக்குமாகாண சமூக... Read more »

யாழ்.கல்லுண்டாய் வீதியில் கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்தில் சிக்கிய இ.போ.ச பேருந்து..!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் பகுதியில் இ.போ.ச பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கின்றது.   காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த  இ.போ.ச பேருந்து காலை 7.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது, இந்த சம்பவத்தில் பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.... Read more »

நாடு முடக்கப்பட்டாலும் இனி பயனில்லை! மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்.. |

நாடு முழுவதும் உடனடியாக முடக்கப்பட்டாலும் அடுத்த 10 நாட்களில் உருவாகப்போகும் பாதிப்புக்களை தவிர்க்க முடியாது. வைத்திய நிபுணர்கள், நாட்டின் ஒட்டுமொத்த மருத்துவ துறையும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். டெல்டா மாறுபாடு எந்த மாகாணங்களில் பரவியது என்பதை அடையாளம் காண வைத்தியர்கள் தற்போது வரிசைப்படுத்தலை அதிகரித்துள்ளனர்... Read more »