ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த ஒருவர் கடற்படையால் கைது..!

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகுடன் ஒருவர் இன்று (2) அதிகாலை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி கடற்படையினரின் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே குறித்த நபர் ஒளிப்பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே படகுடன்  குறித்த நபர் கைது செய்யப்பட்டார். கைது... Read more »

புலம் பெயரிகளின் யுகத்தில் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவது..! சமூக அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்.

கனடாவில் வசிக்கும் கவிஞர் சேரன் தன் கவிதை ஒன்றில் எழுதியதுபோல, முதலாவது தலைமுறைப்  புலம் பெயரிகளிடம் நிலம் அதாவது தாயகத்தைப் பற்றிய நினைவு உண்டு. தாய் மொழியாக தமிழ் உண்டு.தமிழ்ப் பண்பாடு உண்டு.ஆனால் இரண்டாம் தலைமுறைப் புலம் பெயரிகளுக்கு அதாவது கனடாவில் பிறந்து வளரும்... Read more »

சரியான நேரத்தில் சரியான கூட்டு..! சமூக அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்

அனுரவின் அரசாங்கத்தை வலுவான முறையில் எதிர்கொள்வதற்கும், தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்துவதற்கும் நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபடுவதைத் தவிர வேறு வழி இல்லை” என்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமார் இந்திய ஊடகவியலாளரான மீரா சிறீனிவாசனுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில்... Read more »

கொடுக்குளாய் – இயக்கச்சி அபாய வெளியேற்ற பாதை புனரமைக்க தீர்மானம்..!

யாழ் வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் – இயக்கச்சி அபாய வெளியேற்ற பாதை புனரமைமைப்பது என  தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி  தலமையில் இன்று காலை 10 மணியளவில் இடம் பெற்ற கலந்துரையாடலிலேயே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் கொடுக்குளாய் மல்வில் தீர்த்தக் கரையில்... Read more »

யாழில் மனைவியும் மகளும் தனது பேச்சை மீறி வேலைக்கு செல்ல முற்பட்டதால் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

யாழில், தனது பேச்சினை மீறி மனைவியும் மகளும் வேலைக்கு செல்ல முற்பட்டதால் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். உரும்பிராய் கிழக்கு, உரும்பிராயைச் சேர்ந்த ஐயாத்துரை புலேந்திரன் (வயது 45)  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த மார்ச் மாதம்... Read more »

சந்நிதியான் ஆச்சிரம மாதாந்தம் வெளியீடு செய்யப்படும் ஆன்மீக இதழான  ஞானச்சுடர் 327  ஆவது மலர் வெளியீடும், உதவிகளும்…! 

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் வெளியீடு செய்யப்படும் ஆன்மீக இதழான ஞானச்சுடர் 327 வெளியீடு கடந்த 28.03.2025 காலை 10:45 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள்  தலைமையில்... Read more »

சுமந்திரனும் Npp அரசாங்கமும் தமிழினத்திற்கு எதிரான ஒரே வேலைகளைத்தான் செய்கின்றன…!அரசியல் ஆய்வாளர், சி.அ.யோதிலிங்கம்! [VIDEO]

சுமந்திரனும், தேசிய மக்கள் சக்தியும் தமிழ் இனத்திற்கு ஏதிரான ஒரே வேலையைத்தான் செய்கின்றன என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெருவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more »

யாழ் கற்கடதீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா..!

யாழ் கற்கடதீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா நேற்று (30) இடம்பெற்றது. பங்குத்தந்தை அருட்பணி P.பத்திநாதன் அடிகளாரின் தலைமையில் காலை 07.00 மணியளவில் பெருவிழா திருப்பலி இடம்பெற்றது பெருவிழா திருப்பலியை அமலமரி தியாகிகள் துறவற சபையின் அருட்பணியாளர் ஜீவரட்ணம் அடிகளார் தலைமையேற்று ஒப்புக்... Read more »

சங்குப்பிட்டி பகுதியில் கேரளா கஞ்சா மீட்பு..!

யாழ்ப்பாண இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண சிறப்பு அதிரடிப் படையினருடன் இணைந்து நடத்தப்பட்ட நடவடிக்கையில், 30.03.2025 அன்று இரவு அரசடி பகுதியில் 96 கிலோகிராம் கேரள கஞ்சா 45 பார்சல்கள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ. 32 மில்லியன்... Read more »

உப்பின் பெயரில் ஆனையிறவைத் தவிர்ப்பதற்கு அது ஒன்றும் உப்புச்சப்பற்ற இடப்பெயர் அல்ல – பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு!

இலங்கையில் உப்பளங்களை நிர்வகித்து வருகின்ற தேசிய உப்பு வரையறுக்கப்பட்ட நிறுவனம் (National Salt Ltd) ஆனையிறவில் விளையும் உப்புக்கு றஜலுனு (Rajalunu) எனப் பெயரிட்டுள்ளது. இதுகாலவரையில் ஆனையிறவு உப்பு என விழிக்கப்பட்டு வந்த உப்பு றஜலுனு எனப் பெயரிடப்படும் அளவுக்கு, ஆனையிறவு ஒன்றும் உப்புச்சப்பற்ற... Read more »