அரச வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து….!

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அரச வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.மாவட்ட செயலகத்தில் இருந்து வெளியேறிய அரச வாகனம் வீதியில் சடுதியாக நுழைந்த நிலையில் பிரதான வீதி வழியாக... Read more »

வடமாகாண மக்களுக்கு சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள எச்சரிக்கை!

அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டும் வீட்டைவிட்டு வெளியே வாருங்கள், தேவையற்று வெளியில் நடமாடாதீர்கள். என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். சமகால கொரோனா நிலமைகள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும்... Read more »

யாழ்.நகரில் அதிபர்கள், ஆசிரியர்கள் கவனயீர்ப்பு பேரணி…!

கொத்தலாவல சட்டமூலத்தை கிழித்தெறி, அதிபர், ஆசிரியர்களின் 24 வருடகால சம்பள முரண்பாட்டை நீக்கு, கல்விக்கான நெருக்கடியை நீக்கு என பல கோரிக்கைகளுடன் யாழ்.நகரில் அதிபர்கள், ஆசிரியர்கள் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடாத்தியிருக்கின்றனர். நாடு முழுவதும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக... Read more »

பாலத்திலிருந்து தவறி விழுந்து காணாமல்போயிருந்த இளைஞன் சடலமாக மீட்பு….!

யாழ்.பண்ணை பாலத்திலிருந்து தவறி விழுந்து காணாமல்போயிருந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். நேற்றய தினம் நண்பர்களுடன் பண்ணை பாலத்தில் பொழுதை கழித்துக் கொண்டிருந்தபோது பாலத்திலிருந்து தவறி விழுந்து காணாமல்போயிருந்தார். இந்நிலையில் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் உதவியுடன் தேடுதல் நடத்தப்பட்டிருந்தபோதும் இளைஞன் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று காலை பண்ணை... Read more »

இ.போ.ச மற்றும் தனியார் போக்குவரத்து சாரதி நடத்துனர் இடையே நடு வீதியில் கைகலப்பு …!

இலங்கை போக்குவரத்து சபை கிளிநொச்சி சாலை பேரூந்தின் சாரதி காப்பளர் மற்றும் தனியார் பேரூந்து சாரதி, நடத்துனர் உள்ளிட்டோருக்கிடையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளது.   இன்று காலை 06.20 மணியளவில் கரடி போக்கு சந்தியில் ஏ9 வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின்போது காயமடைந்ததாக தெரிவித்து இலங்கை போக்குவரத்து சபை... Read more »

முரசுமோட்டையி்ல் ஆர்வத்துடன் தடுப்பூசி ஏற்றும் மக்கள் ….!

கிளிநொச்சி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட முரசுமோட்டை கிராமத்தில்   தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று(09-08-2021) முன்னெடுக்கப்பட்டுள்ளது  நாட்டின் பல பகுதிகளிலும் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட முருகானந்தா ஆரம்ப  பாடாசலையிலும் ... Read more »

பருத்தித்துறையில் ஆசிரியர்கள் போராட்டம் ….!

சம்பள முரண்பாடு மற்றும் சேர் ஜோன் கொத்தலாவல சட்டமூலத்திற்க்கு எதிராகவும் இன்றைய தினம் காலை 11 மணிக்கு பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.   வடமராட்சி வலய இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சங்கம் ஆகியன... Read more »

மரபுரிமை சின்னங்களான சங்கிலியன் அரண்மனை, நுழை வாயில், யமுனா ஏரி, மந்திரி மனை ஆகியவற்றை புனரமைப்பது தொடர்பான ஆராயவுக் கூட்டம் .

யாழ்பாணம் மரவுரிமை மையத்தின் ஏற்பாட்டில்  நல்லூர் இராசதானி மரபுரிமை சின்னங்களான சங்கிலியன் அரண்மனை, நுழை வாயில், யமுனா ஏரி, மந்திரி மனை ஆகியவற்றை புனரமைப்பது தொடர்பான ஆராயவுக் கூட்டம் நேற்றைய தினம் (07.08.2021) யாழ்ப்பாணம் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில்தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அழைத்துவரப்பட்டே... Read more »

உடுப்பிட்டி பாண்டகைப் பிள்ளையார் ஆலயம் முடக்கப்பட்டது!

உடுப்பிட்டி பண்டகைப்பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர், பூசகர் அனைவரும் தனிமைம்படுத்தப்பட்டுள்ளனர். ஆலயத்தின் தேர்த்திருவிழா நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பலர் முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளிகளைப் பேணாமலும், அதிகளவான எண்ணிகை கொண்டனர். இதனையடுத்து ஆலய நிர்வாகத்தினர், மற்றும் குருக்கள் ஆகியோர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டதோடு... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தில் பணியாற்றிய தொண்டருக்கு கொரோனா தொற்று உறுதி..! ஆச்சிரமம் ஏற்கனவே முடக்கத்தில்.. |

யாழ்.தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய சுற்றாடலில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமத்தில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஆச்சிரமம் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  சுகாதார அமைச்சினால் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கடந்த வெள்ளிக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்து பொதுச் சுகாதார... Read more »