பருத்தித்துறை மரக்கறி சந்தை தொடர்பான வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு..!

பருத்தித்துறை மரக்கறி சந்தை தொடர்பான வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை மரக்கறி சந்தையை புதிய கட்டிடத்திற்கு இடம் மாற்றுவது தொடர்பில்  மரக்கறி  வியாபாரிகளால் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 15/01/2025 அன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் 22/01/2025 நேற்று வரை... Read more »

தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டு முயற்சியும் தோல்விகளிலிருந்து படிப்பினை பெறாத அரசியல் கட்சிகளும்! பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்க

ஈழத்தமிழர் அரசியலில் தமிழ் கட்சிகளின் கூட்டு பற்றிய உரையாடல் சமகாலத்தில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் கட்சிகள் அடைந்த தோல்விகளை அடுத்து அத்தகைய முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு தமிழரிடம் அல்லது தமிழ் அரசியல் கட்சிகளிடம் ஒருமைப்பாடு... Read more »

இனியவை நடக்க வேண்டும். ஒவ்வொருவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும். சுபமங்களம் உண்டாகட்டும்..! இந்துக்குருமார் அமைப்பு.

இனியவை நடக்க வேண்டும். ஒவ்வொருவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும். சுபமங்களம் உண்டாகட்டும்  என இந்துக்குருமார் அமைப்பு தைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. தைத்திருநாளை  முன்னிட்டு அதன் தலைவர் சிவாகமகலாநிதி”. சிவஸ்ரீ. கு.வை.க. வைத்தீஸ்வரக்குருக்கள். அதன் செயலாளர்  சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள்  ஆகியோர் ஒப்பமிட்டு   அனுப்பியுள்ள செய்திக்... Read more »

யாழ். பல்கலையில் மலையகத் தியாகிகள் மற்றும் 51ஆவது தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல்!

மலையக தியாகிகள் தினம் மற்றும் 4வது உலகத்தமிழாராச்சி மாநாட்டு படுகொலை நினைவேந்தல் ஆகியன நேற்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நினைவேந்தலானது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில், பல்கலைக்கழக பொதுத் தூபியில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு நான்காவது உலகத் தமிழாராய்ச்சி... Read more »

தமிழரசு கட்சியின் உட்கட்சிப் பிரச்சினைக்கும் ஒருங்கிணைந்த அரசியலுக்கும் சிவில் தரப்பின் தலையீடு அவசியம்..! அரசியல் ஆய்வாள் சி.அ.யோதிலிங்கம்

தமிழரசு கட்சியின் உட்கட்சிப் பிரச்சினைக்கும் ஒருங்கிணைந்த அரசியலுக்கும் சிவில் தரப்பின் தலையீடு அவசியம் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியிடும் அரசியல் ஆய்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும்... Read more »

2025 : தமிழ் மக்களின் ஆண்டுப் பலன்? அரசியல் ஆய்வுக் கட்டுரை, நிலாந்தன்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவான தமிழ்ப் புத்திஜீவிகளில் சிலர் தமிழ்க் கிராம மட்டத்தில் விவசாய அமைப்புகளைச் சந்தித்து,விவசாயிகளின் குறைகளைக் கேட்டு வருகிறார்கள்.இன்னொரு பக்கம் கடற் தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் சந்திரசேகரன் தமிழ்ப் பகுதிகளில் கடல் தொழிலாளர் சங்கங்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தியின்... Read more »

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 100 நாட்களும் மலிவான மாயைகள் நிறைந்த ஆட்சியும்! -ஐ.வி.மகாசேனன்-

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கப்பட்டு 100 நாட்களை கடந்துள்ளது. அவர்களின் தேர்தல் காலப் பிரச்சாரம் மற்றும் நடைமுறை அரசாங்க செயற்பாடுகள் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், ஆரோக்கியமான விளைவுகளையோ அல்லது மாற்றங்களையோ அவதானிக்க முடியவில்லை. சமகாலத்திலும் வடக்கு-கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் மிலேச்சத்தனமாக... Read more »

ஆதன வரியை (சோலை வரி) செலுத்தாத நெல்லியடி நகரின் பிரபல அரச – தனியார் நிறுவனங்கள்..!

கரவெட்டி பிரதேச சபையால் பொருள்கள் கையகப்படுத்தப்பட்டு ஏலமிடப்படும் அபாயம் யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி நகரத்தில் உள்ள பிரபல பேக்கரி, அரச வங்கி உள்ளிட்ட பல அரச தனியார் வர்த்தக நிறுவனங்கள் இயங்கும் ஆதனங்களுக்கான வருடாந்தம் செலுத்த வேண்டிய நிலுவை ஆதன வரியை (சோலை வரி)... Read more »

யாழ்ப்பாணத்தில் சாப்பிட்டுவிட்டு உறங்கிய இளம் குடும்பப் பெண் மரணம்!

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்றையதினம் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். அரியாலை பகுதியை சேர்ந்த பிரபாகரன் சுவேக்கா (வயது 30) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் இன்று காலை 9 மணியளவில் உணவு... Read more »

ஊடகவியலாளர் குமணனின் தந்தையின் இறுதிக் கிரியைகள் நாளை

போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மண்ணின் முன்னணி தமிழ் ஊடகவியலாளரின் அன்புத் தந்தை காலமானார். முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும், புகைப்பட ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணனின் தந்தை செல்லப்பா கனபதிப்பிள்ளை நீண்ட காலமாக சுகவீனமுற்றிருந்த நிலையில் 2025 ஜனவரி முதலாம் திகதி காலமானார். முன்னாள் கால்நடை... Read more »