கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் நிறைவு. மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பு.

முகமாலை கிராம சேவையாளர் பிரிவில் 2186 ஏக்கர் காணியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் நிறைவுபெற்ற நிலையில் அவை இன்று மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட முகமாலை இத்தாவில் வேம்பொடுகேணி, கிளாலி மற்றும் அல்லிப்பளை கிராம சேவகர் பிரிவில் தொடர்சியாக... Read more »

கிளிநொச்சி பாடசாலை அதிபர், ஆசிரியர் போராட்டங்களிற்கு பெற்றோர் சமூக அமைப்புக்களும் ஆதரவு.

கிளிநொச்சி பாடசாலை அதிபர், ஆசிரியர் போராட்டங்களிற்கு பெற்றோர் சமூக அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டங்கள் மாவட்டத்தின் பல பாடசாலைகள் முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் 1.30 மணியளவில் குறித்த போராட்டங்கள் இடம்பெற்றன. கிளிநொச்சி மகாவித்தியாலயம் முன்பாக பாடசாலை சமூகத்தினால்... Read more »

யாழில் தொடரூந்து சேவைக்கான ஆசன முற்பதிவுகள் இன்று முதல் ஆரம்பம்!

காங்கேசன்துறை – கல்கிசை இடையிலான காலை நேர தொடருந்து சேவைக்கான ஆசன முற்பதிவுகள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று யாழ்ப்பாணம் ரயில் நிலைய தலைமை அதிபர் ரி.பிரதீபன் அறிவித்துள்ளார். காங்கேசன்துறையிலிருந்து அதிகாலை 5.30 மணிக்கும் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திலிருந்து 6.10 மணிக்கும் சேவையை ஆரம்பிக்கும்... Read more »

கொத்துரொட்டி வாங்க சென்ற இளைஞர் படுகொலை.

கொத்துரொட்டி வாங்குவதற்காக சென்ற இளைஞர் ஒருவர், ஹோட்டல் உரிமையாளருடன் ஏற்படுத்திக்கொண்ட முறுகலையடுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம், காலி பத்தேகம நகொடவில் நேற்று (2) இடம்பெற்றுள்ளதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில், 26 வயது இளைஞர் ஒருவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். பத்தேகம நாகொட பிரதேசத்திலுள்ள... Read more »

மின்சார சபையினரின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக மேலும் பல துறையினர் இன்று ஆர்ப்பாட்டம்!

இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள போராட்டம் இன்று மதியம் 12 மணிக்கு இடம்பெறவுள்ளது. கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. கெரவலப்பிட்டி யுகதனவி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி... Read more »

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவு வேளையில் மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேல், தென் மற்றும் வட மாகாணங்களில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ,... Read more »

சீமெந்து தட்டுப்பாட்டுக்கு விரைவில் முடிவு!

சீமெந்து இறக்குமதிக்கான முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். எனவே, எதிர்வரும் 3 வாரங்களுக்குள் அல்லது ஒரு மாதத்திற்குள் சீமெந்து தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சீமெந்து இறக்குமதியாளர்களுக்கும், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று... Read more »

காரைதீவில் பிரதேச காணிப்பயன்பாட்டு திட்டமிடல் கூட்டம் முன்னெடுப்பு

காரைதீவு பிரதேச காணிப்பயன்பாட்டு திட்டமிடல் கூட்டம் காரைதீவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது மீன்பிடி பரிசோதனைக்குரிய காரியாலயம் மீன்பிடி திணைக்களத்திற்கு வழங்குதல், ஐஸ் தொழில் சாலையை உருவாக்குதல் போன்ற கோரிக்கைகள்... Read more »

அருட்தந்தை சிறில் காமினி மனு தாக்கல்!

குற்றப்புலனாய்வு பிரிவால் தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதி மன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அண்மையில் அருட்தந்தை சிறில் காமினி மற்றும் ஏனைய... Read more »

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கறுப்பு தீபாவளி!

தோட்ட நிர்வாகங்களின் அடாவடி அதிகரித்துள்ளதுடன், பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாகவும், அதன் மூலம், மலையக மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ராஜாராம் தெரிவித்துள்ளார். நுவரெலியா தலவாக்கலையில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more »