மன்னார் பேசாலையில் 20 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு-சந்தேகத்தின் அடிப்படையில் பெண் ஒருவர் கைது.

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள பேசாலை 8 ஆம் வட்டார பகுதியில், சுமார் 20 கிலோ 215 கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் நேற்று திங்கட்கிழமை (19) இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . -பேசாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்... Read more »

இலங்கையில் மாடுகளை அறுப்பதை தடை செய்வதற்கு அரசாங்கம் ஒப்புதல்.

இலங்கையில் உள்ளூர் பால் தொழில் துறையை அதிகரிப்பதற்காக மாடுகளை அறுப்பதை தடை செய்வதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. தகவல்துறை அமைச்சில் இன்றைய தினம் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனைகள், அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணாக இல்லை என்று... Read more »

பொது போக்குவரத்து தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!

அரசாங்கம் பச்சைக்கொடி காட்டியவுடன் போக்குவரத்து சேவைகளை மீண்டும் தொடங்க போக்குவரத்து அமைச்சு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து சுகாதார அதிகாரிகள் எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை என்று அவர்... Read more »

விடுதலைப் புலிகளை விமர்சித்த நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் கம்சி குணரட்னத்திற்கு அனந்தி பதிலடி.

தமிழீழ விடுதலைப் புலிகளை நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் கம்சி குணரட்னம் விமர்சித்தது மட்டுமல்லாமல், தற்போதைய இலங்கை ஜனாதிபதியையும், அவரது அரசையும் சர்வதேசம் புறக்கணிக்கும் அரசியலில் தனக்கு உடன்பாடில்லை என்ற போதனையை தமிழர் தாயகத்தில் வாழும் மக்களுக்குள் கொண்டு வருவதற்கான முகவராகவும் மாறியிருக்கிறாரோ என்ற ஐயம்... Read more »

மீண்டும் ஆபத்தான நிலைமையில் இலங்கை – சுகாதார பிரிவு கடும் எச்சரிக்கை

நாட்டு மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் செயற்பட்டால் எதிர்வரும் நாட்களில் மீண்டும் அவதானமிக்க நிலைமை ஏற்பட கூடும் என சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. பயணக்கட்டுப்பாடு குறித்து கண்டுக்கொள்ளாமல் கடந்த வார இறுதியில் பல மக்கள் பல்வேறு பிரதேசங்களுக்கு சென்றதனை அவதானிக்க முடிந்ததாக சுகாதார... Read more »

வீட்டில் உயிரிழந்த சிறுமி விவகாரம் – ரிஷாட் குடும்பத்திற்கு மீண்டும் நெருக்கடி

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதீயூதினின் வீட்டில் உயிரிழந்த சிறுமி இஷாலினியின் மரணம் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைத்தவுடன் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்கமைய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு... Read more »

பொலிஸ் அதிகாரிகளின் பெயர்களில் பொது மக்களை ஏமாற்றும் மர்ம நபர்.

பொலிஸ் அதிகாரிகள் சிலரின் பெயரில், போலி பேஸ்புக் கணக்குகள் உருவாக்கி தகவல் சேரிக்கும் நபர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. தவிந்து கல்ஹார என்ற நபர் தான் புலனாய்வு பிரிவு அதிகாரி என அடையாளப்படுத்தி பல்வேறு நபர்களின் தகவல்கள் மற்றும் முறைப்பாடுகள் சேகரிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.... Read more »

யாழில் வாகனமொன்றை சுற்றிவளைத்த கடற்படையினர்.

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொன்னாலை பகுதியில் வைத்து மதுபான போத்தல்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. வாகனமொன்று சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்ததை அவதானித்த கடற்படையினர் குறித்த வாகனத்தினை சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர். இதன்போது... Read more »

மீனவர்களின் மோதலுக்கு அரசாங்கமே மூலகாரணம்! ந.ஸ்ரீகாந்தா.

கடற்றொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ள கோபாவேசத்தை, திரைமறைவில் நின்றபடி, மேலும் தூண்டிவிட்டு, இரு தரப்பு மீனவர்களையும் மோதவைக்கும் அரசின் நோக்கத்தை சில தமிழ் அரசியல் சக்திகள் செயலில் காட்டத் தொடங்கியுள்ளனவா என்ற கேள்வி எழுந்துள்ளது – என்று, தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர்  சட்டத்தரணி   ந.ஸ்ரீகாந்தா... Read more »

யாழில் புரைக்கேறி உயிரிழந்த ஒரு வயதுக் குழந்தை! – பி.சி.ஆர். சோதனையில் கொரோனா உறுதி!!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை மந்திகை ஆதார மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒரு வயதும் 3 மாதங்களும் நிரம்பிய பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உடுப்பிட்டியைச் சேர்ந்த ஒரு வயதும் 3 மாதங்களும் நிரம்பிய குழந்தை புரைக்கேறிய நிலையில் நேற்று (15)... Read more »