க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளில் 207 பேரின் பெறுபேறுகளை இடைநிறுத்த நடவடிக்கை! September 29, 2021

கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்த, பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பரீட்சை எழுதும்போது, முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உண்மையான பரீட்சார்த்திக்கு பதிலாக இன்னொருவர் ஆள்மாறாட்டத்தில் பரீட்சைக்கு தோற்றியமை,... Read more »

பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

இலங்கையில் தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என சமூக ஊடகங்கள் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உறுதிப்படுத்தப்படாதவை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அடிப்படையற்ற தகவல்கள் குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடையத்தேவையில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். Read more »

சீனாவின் கழிப்பறை பசளைகளை இங்கு இறக்குமதி செய்ய அரசாங்கம் முற்படுகிறது- ரோஹினி குமாரி எம்.பி

சீனாவிலிருந்து 99 ஆயிரம் மொட்ரிக் தொன் உரங்களை இறக்குமதி செய்யவே அமைச்சரவை அனுமதி வழங்கி இருந்தது. இன்று சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய உத்தேசித்துள்ள பசளைகளை, பரிசோதனைக்கு உட்படுத்திய மூன்று அறிக்கைகளும் தோல்வியடைந்துள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற... Read more »

2 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டித்தரும் நிறுவனத்தையே அரசாங்கம் விற்பனை செய்ய முயல்கிறது- எஸ்.எம்.மரிக்கார் எம்பி

வருடமொன்றுக்கு 2 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டித்தரும் யுகதனவி நிலையத்தையே அரசாங்கம் அமெரிக்க நிறுவனத்து விற்பனை செய்ய முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.மரிக்கார் தெரிவித்தார். கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தேசிய... Read more »

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கம்!

நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கான அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார். Read more »

மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவை இடைநிறுத்தக்கோரி மேன் முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல்!

வடக்கு மாகாண ஆளுநரால், மன்னார் பிரதேச சபை தவிசாளர் நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து, தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரினால், கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில், இன்று, ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு, இன்று இடம்பெறவுள்ள நிலையில், குறித்த ரிட் மனு,... Read more »

பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு.

பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் இராணுவத்தை கொண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. எரிபொருள் கொண்டு செல்லும் லொறி சாரதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல் டீசல் உள்ளிட்டவற்றை, அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பதில் சிக்கல்... Read more »

மடு கோயில் மோட்டை காணி விவகாரம்: இ.அன்ரனி சோசை அடிகளார் ஊடகங்களுக்கு விளக்கம்!

மன்னார் மடு-கோயில் மோட்டை பகுதியில் உள்ள, மடு தேவாலயத்திற்கான 50 ஏக்கர் விவசாய காணியில், 5 ஏக்கர் காணியில், மடு தேவாலயம் சார்பாக விவசாய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஏனைய காணியில், 27 விவசாயிகள், குத்தகை அடிப்படையில், இவ்வளவு காலமும், மடு தேவாலயத்திற்கு குத்தகையை செலுத்தியே... Read more »

இலங்கைக்கான இந்தியத்துணைத்தூதுவர் மற்றும் வடமாகாண ஆளுநருக்கிடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு இன்று (28) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலின் போது இந்தியத் திட்டங்கள் மற்றும் வட மாகாணத்தில் இந்திய வளர்ச்சி ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து,... Read more »

சர்வதேச விசாரணைக்கு இலங்கை அனுமதியளிக்க வேண்டும்! – ஹம்சி குணரட்ணம்

இலங்கை அரசாங்கம் சர்வதேச சுயாதீன விசாரணைக்கு அனுமதியளிக்கவேண்டும் என நோர்வேயின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஹம்சி குணரட்ணம் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற டிஜிட்டல் செய்தியாளர் மாநாடு தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.... Read more »