கிளி பீப்பிள் (Kili People) இணை ஒழுங்கமைப்பில் கிளிநொச்சியில் மின் தகன மயானம்.

கிளிநொச்சி மாவட்டத்துக்கென தனியான மின் தகன நிலையமொன்றை திருநகர் மயானத்தில் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையைத் தொடர்ந்து மயான அபிவிருத்திக் குழு ஒன்றிணை அமைத்து அதனூடாக இச்செயல்த்திட்டம் நிறைவேற்றும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. சுமார் இருபத்தி ஐந்து மில்லியன் ரூபாக்கள் தேவைப்படுகின்ற போதும் இலங்கை அரச இயந்திரங்கள்... Read more »

கிளிநொச்சி ஊடக மையத்தினால் ஆரம்பிக்கப்பட்ட கொவிட் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் முதல் கட்ட பணி இன்று நிறைவு….!

கடந்த 04.09.2021 அன்று “பாதுகாப்பாக இருங்கள்” எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி ஊடக மையத்தால் ஆரம்பிக்கப்பட்ட கொவிட் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் முதல் கட்ட வேலைத்திட்டம் 30 ஆவது நாளான இன்று நிறைவு செய்யப்பட்டது.  குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் யாசகர்கள், கைவிடப்பட்டு வீதிகளில் கைவிடப்பட்டவர்களிற்கு பகல் மற்றும்... Read more »

நாடாளுமன்ற பேரவை எடுத்துள்ள முக்கிய தீர்மானம்…!

இலங்கையின் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்களைக் கோர நாடாளுமன்ற பேரவை தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனம், பதிப்பாளர்கள், செய்தி ஆசிரியர்கள், செய்தியாளர்கள் மற்றும் பிற சிவில் சமூக அமைப்புகளிலிருந்து விண்ணப்பங்களைக் கோர... Read more »

பிரான்ஸை சமாதானப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ள அமெரிக்கா.

கடந்த மாதம் வொஷிங்டன் மற்றும் லண்டனுடனான உடன்படிக்கைக்கு ஆதரவாக அவுஸ்ரேலியா பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததை அடுத்து அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையிலான உறவுகள் வலுவிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த செப்டெம்பர் 15 ஆம் திகதி அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள்... Read more »

கொழும்பில் கால் பதித்த ஆசியாவின் இரண்டாவது பணக்காரர்.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனை அபிவிருத்தி தொடர்பில் அண்மையில், ஒப்பந்தம் செய்து கொண்ட இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி, தற்போது ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, தொடர்ந்தும் 10 வது முறையாகவும் ஆசிய பணக்காரர்களில் முதலிடத்தை... Read more »

போரதீவுப்பற்று கிராமசேவகர் பிரிவுகளில் சிறுவர் தின நிகழ்வு.

போரதீவுப்பற்றிலுள்ள 43 கிராமசேவகர் பிரிவிலும் சிறுவர் கழகங்கள் ஸ்தாபிக்கப்பட்டு சுற்றாடலை மேம்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இம்முறை அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகள் எனும் தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அத்தோடு பிரதேச செயலகப்பிரிவுகளில் பட்டினியற்ற மரங்கள் நிறைந்த தார்மீக தேசமொன்றைக் கட்டியெழுப்பும்... Read more »

மனைவியின் சகோதரனால் தாக்கப்பட்டவர் மரணம்!

குடும்பத் தகராறில் தாக்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரழந்தார். புதிய காத்தான்குடி 2 கப்பல் ஆலிம் வீதியில் வசித்து வந்த 28 வயதுடைய முஹம்மது முஸ்பீர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனைவிக்கு... Read more »

திருகோணமலைக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விஜயம்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீஹர்ஷ வர்தன் ஷிரிங்லா திருகோணமலையிலுள்ள இந்திய பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு இன்று காலை விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்திய அரசுடன் இணைந்து இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்திட்டங்கள் குறித்து பார்வையிடுவதற்காக திருகோணமலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு சென்று தாங்கிகளையும் பார்வையிட்டார். சீனக்குடா... Read more »

மட்டக்களப்பு புணானை மேற்கில் மக்கள் ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட புணானை மேற்கு அணைக்கட்டு பகுதியில் உள்ள 6 நபர்களுக்குரிய காணியில் கிரவல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டு பாரிய குழியில் தோண்டி கிரவல் அகழப்பட்டு வருவதாக அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மற்றும் சிறுவர்கள் கவனயீர்ப்பு... Read more »

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் 9 விதமான நோய்கள்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையான காலப் பகுதிக்குள் ஏற்படும் 9 விதமான நீண்ட கால நோய் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறீஜயவர்தனபுர பல்கலைக்கழக நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். சிரமமாக... Read more »