ஆசிரியர் தினத்தன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்!

ஆசிரியர் தினமான எதிர்வரும் 6ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எவ்வாறான தடைவந்தாலும் திட்டமிட்டவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாடசாலைகளுக்கு வர வேண்டுமாயின் தற்போதுள்ள... Read more »

பொலிஸ்அதிகாரியை திட்டிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஏற்பட்ட நிலைமை!

தனது சாரதி அனுமதிப் பத்திரத்தை சோதித்த பொலிஸ் அதிகாரியை திட்டிய சம்பவம் தொடர்பில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒருவர் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி, தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. செயலாளரும்... Read more »

மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து நாட்டில் இதுவரை 13,059 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 22 ஆண்களும்... Read more »

பிரபல பொலிவூட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கைது!

பிரபல பொலிவூட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட மூவர் இந்திய போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மும்பை கடற்கரையில் போதை ஒழிப்பு பொலிஸாரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கைபற்றப்பட்டிருந்தது. இதில், பொலிவூட் நடிகர் ஷாருக்கானின் மகன் உள்ளிட்ட... Read more »

கலாச்சார மத்திய நிலையம் விரைவில் திறந்துவைக்கப்படும். ஐந்து வருட பராமரிப்பு செலவை இந்தியா பொறுப்பேற்கும்!

இந்திய அரசின் நிதிப் பங்களிப்போடு அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மத்திய நிலையமாக இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்புடன் வெகுவிரைவில் திறந்துவைக்கப்படவுள்ளது. எனஇந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்தார். யாழ்ப்பாண நகரின் மத்தியில் மிகப் பிரம்மாண்டமான மண்டபமாக இந்திய அரசின் நிதிப் பங்களிப்போடு இந்த... Read more »

யாழ்.நாவற்குழியில் இன்று அதிகாலை கொள்ளையர்கள் அட்டகாசம்! தாய், மகனை கட்டிவைத்து தாக்கி கொள்ளை.. |

யாழ்.நாவற்குழி பகுதியில் இன்று அதிகாலை வீடொன்றுக்குள் புகுந்த திருடர்கள் வீட்டிலிருந்த தாய் மற்றும் மகனை கட்டிவைத்து தாக்கிவிட்டு வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த தாயும், மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நாவற்குழி மேற்கு சித்தி விநாயகர் கோவிலடி பகுதியில்... Read more »

08 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 38ஆம் கிராமத்தில் வாய்க்காலிலிருந்து நேற்று மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் 38ம் கிராமத்தின் 3ம் வட்டாரத்தில் வசிக்கும் 47வயதுடைய 8 பிள்ளைகளின் தந்தையான அமரசிங்கம்-சுந்தரலிங்கம் என உறவினர்களால் அடையாளம் கானப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார்... Read more »

இன்று நாட்டின் 19 மாவட்டங்களில் 159 மையங்களில் தடுப்பூசி விநியோகம்

இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (02) நாடு முழுவதும் 19 மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 159 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது. நேற்று (01) இரவு 8.30 மணி வரையான இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை,... Read more »

வாள்வெட்டில் நால்வர் காயம்!!

வவுனியா கோவில்குளம் பகுதியில் இளைஞர்குழு ஒன்று, வீதியால் செல்பவர்களை வழிமறித்து வாள் மற்றும் கோடரிகளால் தாக்கியதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுபோதையில் நின்றிருந்த குறித்தநபர்கள் வீதியால் செல்பவர்களை தாக்கியதுடன் வீடுகள் சிலவற்றிற்குள் புகுந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களையும் தாக்கியுள்ளனர். இதனால் பெண்... Read more »

பளை இளைஞர் அணயினரும் கிளிநொச்சி மாவட்ட ஊடக அமையமும் இணைந்து விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களுக்கு தென்னம்பிள்ளைகள் வழங்கி வைப்பு!

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களுக்கு சிறுவர் தினத்தையொட்டி பளை இளைஞர் அணியினரும் கிளிநொச்சி மாவட்ட ஊடக அமையத்தினரும் இணைந்து குறித்த மாணவர்களுக்கு தென்னம் பிள்ளைகள் வழங்கி வைக்கப்பட்டது. பளை பிரதேசத்தில் வசிக்கும் விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களுக்கு... Read more »