மன்னார் மாவட்டத்திலும் கொரோணா தடுப்பு ஊசிகள் ஏற்றும் பணிகள் தீவிரம்…..!

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரிகள்,பொது சுகாதார பரிசோதகர்கள்,சுகாதார ஊழியர்கள் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு... Read more »

அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்…! கிளி மாவட்ட செயலர்.

இன்றைய அவசர நிலையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் அவ்வாறில்லாது பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டமை கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சி பகுதியில் கடந்த வாரம் கொவிட்-19தொற்றினால் உயிரிழந்த ஒருவரின்... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை ஆறாயிரத்து 256 பேருக்கு தொற்று…..!

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை ஆறாயிரத்து 256 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி இருப்பதுடன் 73 மரணங்களும் பதிவாகி இருப்பதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி தகவலை தெரிவித்துள்ளார் தொடர்ந்து... Read more »

அம்பன் மருத்துவ மனையில் இன்று 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி ஏற்றல்….!

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 வயது  தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்டவர்களிற்க்கான கொரோணா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று காலை 8:00 ,மணி முதல் அம்பன் பிரதேச மருத்து மனையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இளைஞர்கள் ஆர்வத்துடன்... Read more »

மின்சாரம் தாக்கி 27 வயதான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு! –

கிளிநொச்சி – அக்கராயன் குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கராஜன் குளம் வைத்தியசாலை வீதியில், மின்சாரம் தாக்கி 27 வயதான. பேரம்பலநாதன் கேசவன் என்ற குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறிய பொட்டிக்கடை ஒன்று அமைப்பதற்காக வெல்டிங் வேலையில் ஈடுபட்டிருந்த வேளை மின்சாரம் தாக்கிய நிலையில் அக்கராஜன்குளம்... Read more »

வவுனியா நகரசபை உறுப்பினரை காவுகொண்ட கொரோனா! –

வவுனியா நகரசபை உறுப்பினர் தர்மதாச புஞ்சிகுமாரி கொவிட் தொற்று காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.வவுனியா தேக்கவத்தையைச் சேர்ந்த 55 வயதான இவர், கொவிட் தொற்று காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். Read more »

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடர் இன்று அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகின்றது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் இந்த கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது. கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து நம்பிக்கையான மீட்பு, நிலைத்தன்மையை உருவாக்குதல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட விடயங்களை மையமாக கொண்டு குறித்த... Read more »

ஜயந்த கெட்டகொட நாடாளுமன்ற உறுப்பினராக சற்று முன்னர் பதவியேற்றார்

ஜயந்த கெட்டகொட நாடாளுமன்ற உறுப்பினராக சற்று முன்னர் பதவியேற்றார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்காக... Read more »

மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளமை குறித்து எதுவும் கூற முடியாது என்கிறார் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்டால், அதனை, தான் தனித்து எதிர்கொள்ள நேரிடும் என, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில், சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மதுபான விற்பனை நிலையங்கள்... Read more »

ஆறு தசாப்த கால பாரம்பரியத்தை முடிவுக்கு கொண்டுவரும் சந்திரிகா!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆறு தசாப்த கால பாரம்பரியத்தை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பண்டாரநாயக்க நினைவேந்தல் தொடர்பில் சந்திரிகா குமாரதுங்க இவ்வாறான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,... Read more »