ஆழ்கடல் கடலட்டை தொழிலில் ஈடுபட்ட ஒருவரை மூன்று நாளாக காணவில்லை,தேடும் பணிகள் மூன்றாவது நாளாகவும் தீவிரம்…..!

நேற்று முன்தினம் சனிக்கிழமை கடலட்டை பிடிப்பதற்க்காக சென்ற திருகோணமலை குச்சவெளியை சேர்ந்த  30 வயதுடைய சுயூட்கான் பாஜத்கான் எனும் இரண்டு குழந்தைகளின் தந்தை  காணாமல் போயுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது காணாமல் போன நபர் கடலில் சுமார் எண்பது  அடி ஆழத்தில் ஒட்சிசன்... Read more »

யாழில் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் மரணம்….!

யாழ். நகரில் பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த முதியவர் ஒருவர், அவரின் வீட்டு வாசலில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் சின்னத்தம்பி சாந்தகுணமூர்த்தி (வயது 67) என்னும் யாழ்.பொம்மை வெளியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். சைக்கிளில் பால் விற்பனையில்... Read more »

சீனாவின் அதிமுக்கிய விருதை வென்றுள்ள இலங்கை பேராசிரியர் –

இலங்கையின் பேராசிரியர் மலிக் பீரிஸுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான “எதிர்கால அறிவியல் பரிசு (Future Science)இலங்கையில் உள்ள சீன தூதரகத்தால் வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர் மலிக் பீரிஸ் தவிர, சீன பேராசிரியர் யூன் குவோக்யுங்கிற்கு இந்த ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம்... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட கர்ப்பவதி பெண் உயிரிழப்பு!

யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் விசேட சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட கர்ப்பவதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  யாழ்.நாவாந்துறை பகுதியை சேர்ந்த ராஜன் மரியதெஸ்ரா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 1ம் திகதி காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில்... Read more »

யாழ்.மாவட்டத்தில் மேலும் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தில் மேலும் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்டச் செயலக மற்றும் சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  இதன்படி பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 20 பேருக்கும், அன்டிஜன் பரிசோதனையில் 160 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோர்... Read more »

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் இன்று 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது. ஜெனிவாவில் ஆரம்பமாகும் இந்த கூட்டத்தொடர் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை நடைப்பெறும். அனைத்துலக நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து... Read more »

மேலும் 144 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 11,296 கொவிட் மரணங்கள்

– 77 ஆண்கள், 67 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 122 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 144 மரணங்கள் நேற்று (11) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »

யாழ்.வடமராட்சி கிழக்கு குடாரப்பு கடலில் மீனவர் காணாமல்போயுள்ளார்! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.. |

யாழ்.வடமராட்சி கிழக்கு குடாரப்பு  கடற்பகுதியில் கடலட்டை பிடிப்பதற்காக கடலில் இறங்கிய மீனவர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குறித்த மீனவர் படகில் சென்று கடலட்டை பிடிப்பதற்காக கடலினுள் இறங்கியுள்ளார். குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் அவருடன் இணைக்கப்பட்டிருந்த கயிற்றை மேலே இழுத்தபோது... Read more »

கைதிகளின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

கைதிகளும் மனிதர்களே என்பதற்கிணங்க அவர்களது வாழ்வுரிமையை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் தலையாய கடமை என குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. ஊடக சந்திப்பின் கலந்துகொண்ட... Read more »

வல்வெட்டித்துறையில் குடும்பஸ்தரை கொலை செய்தவர் 03 வாரங்களின் பின்னர் திருகோணமலையில் கைது!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில், குடும்பத்தகராறு காரணமாக, 2 பிள்ளைகளின் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பித்த உறவினர் ஒருவர், 3 வாரங்களின் பின்னர், இன்று திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், மற்றைய நபர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம்... Read more »