தனுஷ்கோடி கடல் வழியாக நாட்டுப்படகில் சட்டவிரோதமாக இலங்கைக்கு அழைத்துச் செல்வதாக ஏமாற்றிய பெண் உட்பட 4 மீனவர்கள் கைது:

ராமேஸ்வரம் செப் 07, தனுஷ்கோடி கடல் வழியாக நாட்டுப்படகில் இலங்கை பெண்ணை சட்டவிரோதமாக இலங்கைக்கு அழைத்துச் செல்வதாக ஏமாற்றிய பெண் உட்பட 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டு ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடியில் இருந்து நேற்று அதிகாலை நாட்டுப்... Read more »

கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைக்க நடவடிக்கை! 

நாளுக்கு நாள் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கரைச்சி பிரதேச தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். குறித்த மயானத்தை அமைக்க 24 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தொகையில் ஒரு கோடி ரூபாவை கிளிநொச்சியில் உள்ள... Read more »

கிருசாந்தி படுகொலையின் 25 ம் ஆண்டு நினைவேந்தல் இன்று இடம் பெற்றது…!

மாணவி கிருசாந்தி குமாரசுவாமி அவரது தாயார் இராசம்மா அயலவர் கிருபாமூர்த்தி தம்பி பிரணவன் ஆகியோர் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட செம்மணிப் படுகொலையின் இருபத்து ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழ் தேசிய கட்சி அலுவலகத்தில் அதன் செயலாளர் நாயகம் எம் கே சிவாஜிலிங்கம்... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட் தொற்றினால் உயிரிழந்த 44 பேரில் 90 வீதமானவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள்…!

கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட் தொற்றினால் உயிரிழந்த 44 பேரில் 90 வீதமானவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களும், ஒரு தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுமாவர் என்பதால் தடுப்பூசகளை முன்வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »

யாழ்.மாவட்டத்தில் தொடரும் அபாயம்! மேலும் 213 பேருக்கு கொரோனா தொற்று, நல்லுார், சண்டிலிப்பாய், உடுவில் பகுதிகளில் அதிக தொற்றாளர்கள்.. |

யாழ்.மாவட்டத்தில் மேலும் 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலகம் மற்றும் சுகாதார பிரிவு வெளியிடும் தினசரி நிலவர அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றது.  இதன்படி மாவட்டத்தில் அன்டிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் படி 213 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதனடிப்படையில்... Read more »

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு மின் தகனசாலை சாத்தியமா? மாவட்ட செயலர் விளக்கம்,

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தனம் செய்வதில் நெருக்கடி உருவாகியுள்ளபோதும் மின்தகனசாலையை உடனடியாக அமைப்பது சாத்தியமில்லை. என யாழ். மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.  யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று மதியம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில்... Read more »

யாழ்.மாவட்டத்தில் மோசடி வர்த்தகர்களை தேடி பாவனையாளர் அதிகாரசபை அதிரடி சோதனை! |

யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம் அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய நிலை நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பாக பாவனையாளர் அதிகாரசபை வர்த்தக நிலையங்களில் ஆய்வு நடத்தியுள்ளது.  யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கொக்குவில், இணுவில், மருதனார்மடம், சுன்னாகம், பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை ஆகிய பிரதேசங்களில் உள்ள... Read more »

யாழ்.அராலி மத்தியில் மீனவர்களின் வலைகளை இலக்குவைத்து திருடும் கும்பல்!

யாழ்.அராலி மத்தியில் மீனவர்களின் வலைகளை இலக்குவைத்து திருடும் கும்பல். தொடர்பாக மீனவர்கள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். நேற்றய தினம் மட்டும் 5 வலைகள் காணாமல் போயுள்ளதுடன், கடந்த சில நாட்களில் சுமார் 20 வலைகள் தொடர்ச்சியாக க் களவாடப்பட்டு உள்ளதாக... Read more »

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 75 பேர் உட்பட வடக்கில் 100 பேருக்கு தொற்று!

யாழ்.மாவட்டத்தில் 75 பேர் உட்பட வடக்கில் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 100 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் 75 பேருக்கு தொற்று.  உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 42 பேருக்கும், கோப்பாய்... Read more »

மறவன்புலவு சச்சிதானந்தனிடம் பொலிசார் வாக்குமூலம்! –

மறவன்பிலவு சச்சிதானந்தனிடம் சாவகச்சேரி பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். மறவன்பிலவில் சச்சிதானந்த்த்தினால் தாய், தந்தையர் நினைவாக 53அடி உயரமான தூபி மற்றும் பரம்பரை வழிபாடு நாகதம்பிரான் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது அதில் மறவன்பிலவில் காணாமல் ஆக்கப்பட்ட 32 பேரின் விபரங்களையும் பொறித்துள்ளார். இதில் ஈழத்தில் தமிழர் அரசியல்... Read more »