கிளிநொச்சியைச் சேர்ந்த நால்வர் கொரோனாவால் சாவு…!

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், திருச்செல்வம் செல்லம்மா (வயது 82) என்பவர் உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு அவருடைய மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அங்கு அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை,... Read more »

வவுனியாவில் ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் மரணம்!

வவுனியா மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் ஒரே நாளில் 9 பேர் மரணமடைந்துள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, கல்குண்ணாமடு பகுதியைச் சேர்ந்த 65 வயது பெண்ணும், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 60 வயது ஆணும் கொரோனாத் தொற்று காரணமாக நேற்று மரமணமடைந்துள்ளனர். இது... Read more »

யாழ்.பல்கலைகழக இணைநிலை பேராசிரியர்கள் இருவர் உட்பட 4 பேர் பேராசிரியர்களாக பதவி உயர்வு..!

யாழ்.பல்கலைகழகத்தில் இணைநிலை பேராசிரியர்கள் இருவர் உட்பட 4 பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. தாவரவியல் துறைத் தலைவரும், இணைப் பேராசிரியருமான இ.கபிலன் தாவரவியலில் பேராசிரியராகவும், இரசாயனவியல் துறையின் முன்னாள் தலைவரும், இணைப் பேராசிரியருமான திருமதி மீனா செந்தில்நந்தனன் இரசாயனவியலில் பேராசிரியராகவும்,... Read more »

யாழ்.மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு! |

யாழ்.மாவட்டத்தில் மேலும் 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஆணைக்கோட்டையை சேர்ந்த 89 வயதான பெண் ஒருவரும், அரசடியை வீதியை சேர்ந்த 79 வயதான ஆண் ஒருவரும் முல்லைத்தீவை சேர்ந்த 33 வயதான... Read more »

யாழ்.மாவட்டத்தில் 223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தில் 223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் தெரிவித்துள்ளார்.  மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய தினம் மாலை கிடைத்த அன்டிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் புதிய தொற்றாளர்களாக 223 பேர்... Read more »

யாழ்.மந்திகை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற சென்றிருந்த 45 போில் 32 பேருக்கு கொரோனா தொற்று..!

யாழ்.பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்குச் சென்றிருந்த 45 பேருக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  அவர்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டியவர்கள், இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்படவேண்டியவர்கள் மற்றும் வீடுகளில் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் என... Read more »

நாவலர் கலாச்சார மண்டபத்தை புனரமைத்து அதன் செயற்பாடுகளை விரிவாக்கம் நடவடிக்கை….!மாநகர முதல்வர் மணிவண்ணன்.

நாவலர் கலாச்சார மண்டபத்தை புனரமைத்து அதன் செயற்பாடுகளை விரிவாக்கம் செய்யவுள்ளதாக  யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நாவலர் கலாசார மண்டபம் சரியாக பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பலராலும் முன்வைக்கப்பட்டு  இந்து கலாச்சார திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறும் பல்வேறு கருத்துக்கள்,  கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு... Read more »

பாகிஸ்தான் தொழிற்சாலையில் தீ விபத்து: 15 பேர் பலி..!

பாகிஸ்தானில் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில் நேற்று தீப்பிடித்தது.  அப்போது தொழிற்சாலைக்குள் 26 தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் பல மணி நேரம்... Read more »

நாட்டை தொடர்ந்து 03 அல்லது 04 வாரங்களுக்காவது முடக்குங்கள்- திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி –

நாட்டை தொடர்ந்து 3 அல்லது 4 வாரங்களுக்காவது முடக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சறுத்தலில் நாட்டை முடக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் என்பது மிகவும் அவசியமானது. நாட்டின் பொருளாதாரத்தை விடவும் நாட்டு மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கே முன்னுரிமையளிக்க... Read more »

ஆர்ப்பாட்டங்களில் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கேனும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்படவில்லை! –

ஆர்ப்பாட்ட கொத்தணி உருவாகும், ஆசிரியர் கொத்தணி உருவாகும் என்று அரசாங்கம் அஞ்சினாலும் ஆர்ப்பாட்டங்களின்போது கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கேனும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்படவில்லை என்று, முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர் புபுது ஜெகொட தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். கொத்தலாவல... Read more »