
கொரோனா தாக்கத்தினால் நாட்டு மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான நிலையில் அரசியல்வாதிகள் கொழும்பில் இருந்து கொண்டு அரச வரப்பிரசாதங்களை அனுபவிக்காமல் தமக்குரிய பிரதேசங்களுக்கு சென்று மக்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்ய வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,... Read more »

நாட்டில் நெருக்கடி நிலை தீவிரமடைந்துவரும் நிலையில் 2 வாரங்கள் பொது முடக்கத்தை அறிவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச உயர்மட்டங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாளை நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு பொது முடக்கத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது. சுகாதார பிரிவினரின்... Read more »

யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் தீவிரமடைந்துள்ள நிலையில் மாவட்ட மக்கள் மிக எச்சரிக்கையுடனும், பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ளவேண்டும். என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »

யாழ்.பொன்னாலையில் படையினர் பொதுமக்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியிடம் விளக்கம் கோரியுள்ளது. ஆணைக்குழுவின் 14 ஆவது உறுப்புரைக்கு அமைய, ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு இந்த விளக்கம் கோரப்பட்டுள்ளது. என... Read more »

கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காததால் குடும்பஸ்த்தரை வெள்ளை வாகனத்தில் கடத்த மேற்கொள்ளப்பட்ட சதி முறியடிக்கப்பட்டுள்ளதுடன் 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒருவரிடம் ஒரு... Read more »

யாழ்.மாவட்ட செயலகத்தில் இயங்கும் மோட்டார் போக்குவரத்து பிரிவின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் கூறியுள்ளதாவது, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அதேபோல கொன்சியூலர் பிரிவு மற்றும் பதிவாளர்... Read more »

எதிர்காலத்தில் மேலும் சில அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் பல அமைச்சரவை அமைச்சுக்களில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கடந்த திங்கட்கிழமை... Read more »

யாழ்.அரியாலை – கனகரத்தினம் வீதியை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்திருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 56 வயதான பெண் ஒருவரே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 187ஆக... Read more »

யாழ்.மாவட்டத்தில் ஒரு வயதுக்குட்பட்ட இரு குழந்தைகள் உட்பட 105 பேருக்கும் வடக்கில் சுமார் 144 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். யாழ்.மாவட்டத்தில் 105 பேருக்கு தொற்று. யாழ்.போதனா வைத்தியசாலையில் 46... Read more »

பண்டாரவளை – சமகி மாவத்தை பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணடைந்து வீடு திரும்பிய நபர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். 62 வயதுடைய அதே பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் கிராம உத்தியோகத்தர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் பதுளை பொது வைத்தியசாலையின் கொவிட் சிகிச்சை பிரிவில் சிகிச்சை... Read more »