
யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 69 பேர் உட்பட வடமாகாணத்தில் சுமார் 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.போதனா வைத்தியசாலை 610 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் 69 பேருக்கு தொற்று. யாழ்.போதனா வைத்தியசாலையில் 30 பேர், மானிப்பாய்... Read more »

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 170 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது 16 வீத அதிகரிப்பாகும். அத்துடன், 26,852 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12ம் திகதிக்கு... Read more »

அம்பாறை – அளிக்கம்பை பிரதேசத்தில் வீட்டில் வெடி தயாரித்த நிலையில்,வெடி வெடித்து படுகாயமடைந்த நிலையில் தம்பதியினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பன்றிக்கு வெடி வைக்க வீட்டில் வெடி தயாரித்த போது அவை வெடித்து காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அக்கரைப்பற்று,... Read more »

இலங்கையில் கொரோனாவின் பரவல் பேரழிவு நிலையை அண்மித்துவிட்டது. செயலற்று இருப்பதை விட தாமதமாகவேனும் செயற்படுவது நன்று. எனவே, பேரழிவு நிலைக்குச் செல்லும் முன்னர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் குழுவால் பரிந்துரை செய்யப்பட்டவாறு மீண்டும் ஒரு முறை நடமாட்டக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என... Read more »

நாடெங்கிலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற முடியாத அளவு இடப்பற்றாக்குறை காணப்படுகின்றது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நேரம் இல்லாமல் வைத்தியர்களும் தாதியர்களும் தத்தளித்து கொண்டிருக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு... Read more »

விசேட நிபுணர்களின் ஆலோசனைகளை பொருட்படுத்தாது தான் தோன்றித்தனமாக செயற்படுவதால் முழு நாடும் இன்று அபாய நிலையில் இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து... Read more »

சூரியவெவ – வெவேகம பிரதேசத்தில் பொலிஸாரால் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் சந்தேக நபர்கள் இருவரை கைது செய்ய சென்ற சந்தர்ப்பத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட எதிர் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இரண்டு சந்தேக நபர்களும்... Read more »

யாழ்.பொன்னாலை மேற்கில் வீடுகளுக்குள் புகுந்து இராணுவம் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படவேண்டும். என கோரியிருக்கும் பொன்னாலை மக்கள் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடும் பதிவு செய்திருக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) நள்ளிரவு 12 மணியளவில் பொன்னாலை மேற்கு... Read more »

நாட்டில் தற்போது பரவிவரும் டெல்டா வகை திரிபு வைரஸின் புதிய 3 பிறள்வுகளை வைத்திய நிபுணர்கள் அடையாளம் கண்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கூறியுள்ளார். SA222-V, SA 701-S மற்றும் SA 1078-S ஆகிய டெல்ட்டா வைரஸின் பிறழ்வுகள் இவ்வாறு கொரோனா திரிபின்... Read more »

நல்லைக் கந்தன் ஆலய உற்சவத்திற்க்காக மூடப்பட்ட வீதிகளூடாக அப்பகுதியில் உள்ள வணிக நிலையங்களிற்க்கு செல்வதற்கு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தற்கால சூழலில் சுகாதார நடைமுறைகளை பேணி விசேட பூஜை... Read more »