கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு..!

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு 10.05.2023 கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நிகழ்வு இன்று இரண்டாம் நாளாக முன்னெடுக்கப்பட்டது Read more »

ஊடக துறை சுதந்திரமாக செயற்பட வேண்டுமாக இருந்தால் அது சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கருத்து தெரிவிக்கும் சுந்திரத்தின் அடிப்படையில்  மாத்திரம் தான்  சாத்தியமாகும்….! கோசலை மதன்.

ஊடக துறை சுதந்திரமாக செயற்பட வேண்டுமாக இருந்தால் அது சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கருத்து தெரிவிக்கும் சுந்திரத்தின் அடிப்படையில்  மாத்திரம் தான்  சாத்தியமாகும் என யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கோசலை மதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையில் தனியார் விடுதி ஒன்றில் இடம் பெற்ற... Read more »

புதிய பயங்கரவாத சட்ட மூலத்தை எதிர்த்தே ஆக வேண்டும் – தமிழரசு கொழும்பு கிளை உப தலைவர் மிதிலைச்செல்வி

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பச் சட்டமூலத்தை நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் எதிர்த்தே ஆக வேண்டும் என தமிழரசு கட்சியின் கொழும்புக்கு கிளை உப தலைவர் மிதிலைச் செல்வி சிறீ பத்மநாதன் வேண்டுகோள் விடுத்தார். நேற்றையதினம் சனிக்கிழமை யாழ். பொது நூலக... Read more »

வெடுக்குநாறி மலையிலிருந்து தையிட்டிக்கு – ஆய்வாளர் நிலாந்தன்

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தை நொதிக்கச் செய்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான்.போலீசாரோடு முரண்பட்டதன்மூலம் அதை உணர்ச்சிகரமான ஒரு விவகாரமாக மாற்றியதும் அந்தக் கட்சிதான்.அதன் விளைவாகத் தமிழரசுக் கட்சியும் உட்பட ஏனைய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்பகுதிக்கு வரவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நீதிமன்றம்... Read more »

சிலருடன் நடைபெறும் போராட்டம் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை வழங்காது – சித்தார்த்தன் எம்பி தெரிவிப்பு

யாழில்  சில பேருரின் பங்கு பெற்றுதலுடன் இடம்பெறும் போராட்டங்கள் அரசாங்கத்துக்கு அழுத்தத்தை வழங்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ் கந்தரோடையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு... Read more »

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் தாம் அக்கறையாக உள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் தாம் அக்கறையாக உள்ளதாக லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் புத்திஜீவிகளுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு விடயங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தமிழ் கட்சிகளும் அரசாங்கத்தோடு இணைந்து ஒத்துழைப்புக்களை வழங்க முன்வருவார்கள் என நினைப்பதாகவும்... Read more »

இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் நாட்டை முன்னேற்ற முடியாது.சி.அ.யோதிலிங்கம்

இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் நாட்டை முன்னேற்ற முடியாது என்று அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநர் சி.அ.யோதிலிங்கம் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது . இனப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மே தினத்தில்... Read more »

ஜனாதிபதியின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி

வளமான இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப புத்தரின் போதனைகளின்படி அனைவரும் ஒத்துழைப்புடனும் ஒற்றுமையுடனும் அணிதிரளுமாறு இந்த புனித நாளில் நான் கேட்டுக்கொள்கிறேன்’ என வெசாக் பௌர்ணமிதின செய்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மூவித ரத்தினங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட வெசாக் பெர்ணமி தினம் பௌத்த நாட்காட்டியின் மிக... Read more »

வடந்தை – 2023” நூலுக்கான ஆக்கங்கள் கோரல்…!

எமது திணைக்களத்தினால் வருடா வருடம் வெளியிடப்படும் வடமாகாண பண்பாட்டம்சங்களை உள்ளடக்கிய ‘வடந்தை’ நூலுக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன. இந்நூலில் உள்ளடக்கப்படுவதற்கான தரமான ஆக்கங்கள் எழுத்தாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன. பின்வரும் விதிமுறைகளைப் பின்பற்றி கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுக்கமைவான ஆக்கங்களை 26.05.2023 ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு கிடைக்கக் கூடியவாறு அனுப்பி... Read more »

யாழ்.தையிட்டி பகுதியில் தொடரும் பதற்றம்! நள்ளிரவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டத்தரணி

யாழ்.தையிட்டி பகுதியில் தற்போது நிலவும் பதற்றமாக சூழ்நிலையில், சட்டதரணி சுகாஸ்ற்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் குடித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக அங்கிருக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததையடுத்து அங்கு சட்டத்தரணிக்கும் பொலிஸாருக்கம் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரி சட்டத்தரணி சுகாஸ்... Read more »