அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர். இன்று (29) முற்பகல் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி திசாயக்க தெரிவித்தார். சிறைச்சாலையின் உணவகத்தில் இருந்து இருவரும் தப்பிச்சென்றுள்ளனர். தப்பிச்சென்ற கைதிகளைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். Read more »
அரச வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் பட்டதாரிகளின் வயது வரம்பை 38 ஆக அதிகரிக்க வேண்டுமென விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது ஆட்சேர்ப்புக்கான வயது வரம்பு 35 ஆக உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது... Read more »
உள்ளூர் உற்பத்தியாளரைப் பாதுகாக்கவும் நுகர்வோரைப் பாதுகாக்கவும் புதிய வரி அறிமுகப்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலை மாவட்டம் ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அத்துடன், 2025ஆம் ஆண்டு... Read more »
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று(28)இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்... Read more »
பொதுஜன பெரமுண கட்சியை மீளக் கட்டியெழுப்பி, பலப்படுத்துவதில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுஜன பெரமுண கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து முன்னைய தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தல் உரிய காலப்பகுதியில் நிச்சயமாக நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எஸ்.ரத்நாயக்க உறுதிபட தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை நடத்தவேண்டியுள்ளதால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதில் எவ்வித தாக்கமும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரகாரம்... Read more »
வலி வடக்கில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்றையதினம்(27) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம்... Read more »
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நவீனமயப்படுத்தாமல் நாட்டின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தெற்காசிய வலயத்தின் மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலையாகக் கருதப்படும் காலி கராபிட்டியவில் நிர்மாணிக்கப்பட்ட “ஜேர்மன் – இலங்கை... Read more »
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்தி 4 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கும் அவர் குற்றவாளி என சட்ட மா... Read more »
திருகோணமலையில் 1008 சிவலிங்கம் வைப்பதை தடுக்குமாறும், சிங்கள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரஙகளை வழங்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று (27) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை கோகன்னபுர காக்கும் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் வாழ்ந்து வரும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள்... Read more »