மொட்டு கட்சி கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பநிலை..!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கூட்டத்தின் நிறைவில் கட்சியின் இரண்டு தரப்பிற்கு இடையில் முரண்பாட்டு நிலை ஏற்பட்டு, அது வாய்த்தர்க்கமாக மாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் சமூக... Read more »

மூடப்பட்ட 53 மசாஜ் நிலையங்கள்; 137 பெண்கள் கைது! இருவருக்கு எயிட்ஸ் தொற்று

நீர்கொழும்பு பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதிகளில் பணிபுரிந்து வந்த 2 பெண்களுக்கு HIV எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தலதுவ இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »

பசிலின் உயர் பதவி நாமலுக்கு…!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று பிற்பகல் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்  உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்... Read more »

கெஹலியவின் மகள் முறைப்பாடு

தரம் குறைந்த மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தனது தந்தையின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவரது  மகள் சமித்ரி ரம்புக்வெல்ல மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு... Read more »

40 வருடங்களாக மறுக்கப்படும் உரிமை: கிழக்குத் தமிழர்கள் தொடர் போராட்டம்

கிழக்கு மாகாணத்தில் சுமார் நான்கு தசாப்தங்களாக இயங்கி வரும் உப பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக மாற்றி அப்பகுதியில் பரம்பரையாக வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. நேற்றைய தினம் (மார்ச் 25) கல்முனை... Read more »

செயற்றிட்டங்களின் வெற்றிக்கு அதிகாரிகள் மட்டுமல்லாது பயனாளிகளும் அதிக அக்கறையும் செலுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் ஒவ்வொன்றினம் முழுமையான வெற்றிக்கு அதிகாரிகள் மட்டுமல்லாது பெற்றுக்கொள்ளும் பயனாளிகளும் அதிக கரிசனையும் அக்கறையும் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவ்வாறான ஒரு நிலை உருவாக்கப்படும் போதுதான் வழங்கப்படும் திட்டங்கள் அல்லது அபிவிருத்திகள் ஒவ்வொன்றும் எதிர்பார்க்கும் முழுமையான இலக்கை... Read more »

சஜித்தின் புஸ்வெடியை படம்போட்டுக் காட்டிய கிரிஎல்ல…

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை சஜித் பிரேமதாச நேரடியாக பெற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்த நிலையில், வாக்கெடுப்பின் போது அரசாங்கத்தின் ஒருவரைக் கூட அவரால் வெற்றிக்கொள்ள முடியாமல்போனது. மார்ச் 03 ஆம் திகதி... Read more »

டிப்போ ஊழியர்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை…

70 டிப்போ ஊழியர்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதாவது, 107 இ.போ.ச டிப்போக்களில் 70 டிப்போக்களின் ஊழியர்களுக்குப் பல மாதங்களாக மாதாந்த சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. திறை சேரி மூலம் இலங்கை போக்குவரத்து... Read more »

கள்வர்களையே அரசாங்கம் தொடர்ந்தும் பாதுகாக்கின்றது : விஜித்த ஹேரத் குற்றச்சாட்டு!

வாழ்க்கை செலவினை அதிகரித்து அரசாங்கம் கள்வர்களை பாதுகாக்கும் நடவடிக்கையினையே மேற்கொண்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »

சஜித் தரப்பு மெதுமெதுவாக ரணில் பக்கம் நழுவுகின்றது…

ஐக்கிய மக்கள் சக்தியின் பராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஒரேடியாக ரணில் விக்ரமசிங்வுடன் இணைந்துகொள்வது குறித்த இரகசிய பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல செயற்பாட்டாளர் ஒருவரின் நுகேகொடையில் உள்ள இல்லத்தில் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் ரணில்... Read more »