ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது கட்சியின் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் செயலாளாராக கோவிந்தன் கருணாகரம்(ஜனா),தேசிய... Read more »

மண்ணை காப்பாற்ற ஒற்றுமையாக அணிதிரள்வோம் – செல்வம் எம்பி ..!!

மண்ணை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் நாம் ஒரு அணியிலே இருக்கவேண்டும். அப்படியிருந்தாலே அரசாங்கம் எம்மை திரும்பி பார்க்கும் நிலமை ஏற்படும் என்று பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் வவுனியா நகரசபை... Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி யார்? மைத்திரிபாலவை உடனடியாக பொலிஸார் அணுக வேண்டும்…!

நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரியை அறிந்துள்ள மைத்திரிபாலவை உடனடியாக பொலிஸார் அணுக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு பேராயர் இல்ல வளாகத்தில் இன்றையதினம்(23)  ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை... Read more »

மைத்திரியை உடனடியாக கைது செய்யுங்கள்…!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உடனடியாக கைது செய்ய வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி மத்திய கொழும்பு அமைப்பாளர் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை நீதிமன்றம் உத்தரவிட்டாலோ அல்லது கேட்டாலோ வெளியிடத் தயார்... Read more »

சுதந்திரமே இல்லாத நாட்டில் சுக போகத்துக்கு செலவழிக்கும் பணத்தை விவசாயிகளுக்கு வழங்குங்கள்…! சாணக்கியன் எம்.பி

சுதந்திரமே இல்லாத நாட்டில் சுதந்திர தினத்துக்கும் அமைச்சர்களின் சுக போகத்துக்கும் செலவழிக்கும் பணத்தை அரசு விவசாயத்திற்கு செலவு செய்தால் விவசாயிகளினதும் நாட்டு மக்களினதும் வாழ்க்கைத் தரம் எவ்வாறு உயர்வடையும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார் அவர் மேலும் நேற்றையதினம்(22)  இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில்... Read more »

ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் நியமனம்…!

யாழ்.மாவட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைப்பாளர் ஒருவரை இன்னும் உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க சில தினங்களுக்கு... Read more »

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தீவிர  விபத்து சிகிச்சை பிரிவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைப்பு…!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திஇஈர  விபத்து சிகிச்சை பிரிவு இன்று பிற்பகல் 3:30 மணியளவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து அரசின் இலகு கடன் திட்டத்தின் கீழ் நான்கு பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட குறித்த தீவிர விபத்து சிகிச்சை பிரிவே... Read more »

வலி.வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 278 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள 278 ஏக்கர்  மக்களின் காணிகள்  இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்  விடுவிக்கப்பட்டுள்ளது. ஜே- 244 வயாவிளான் கிழக்கு,  ஜே-245 வயாவிளான் மேற்கு, ஜே-252 பலாலி தெற்கு, ஜே-254 பலாலி வடக்கு, ஜே-253 பலாலி கிழக்கு  ஆகிய... Read more »

கடற்றொழிலாளர்களால் முற்றுகையிடப்பட்ட யாழ்.இந்தியத் துணைத்தூதரகம்…!

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி  நுழைந்து  இழுவை மடி தொழிலை மேற்கொள்ளும் இந்திய மீனவர்களுக்கு  எதிர்ப்பு தெரிவித்து  யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தினை யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் இன்று(22) காலை  முற்றுகையிட்டுள்ளனர். மேற்குறித்த கோரிக்கையை முன்வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை(19)   முதல் மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரத போராட்டத்தினை... Read more »

வடக்கு-கிழக்கு சிவில் சமூகப் பிரதிநிதிகள்- மனோ எம்.பி திடீர் சந்திப்பு…!

வடக்கு – கிழக்கின் மக்கள் மனு சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழு இன்றைய தினம்(22)  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கொழும்பிலுள்ள மனோ கணேசனின் இல்லத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில், மக்கள் மனு குழுவின் சார்பில் இணைப்பாளர் ஏ.ஜதீந்திராஇ... Read more »