வீடற்ற அனைத்து குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்க திட்டம்

கொழும்பு கஜிமாவத்தையில் வசிக்கும் அனைத்து வீடற்ற குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்கத் தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அரசாங்கத்தின் வீடுகள் வழங்கும் கொள்கைகள் மற்றும் அளவுகோல்களுக்கு அமைவாகவே இந்த பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். கொழும்பு... Read more »

எங்கு எமக்கும் இந்தியாவிற்குமான உறவுநிலை கைவிட்டுபோனதோ அங்கிருந்துதான் அவ்வுறவு மீள  தொடங்கப்பட வேண்டும்…..! ஜனநாயக போராளிகள் கட்சி கோரிக்கை.

எங்கு எமக்கும்  இந்தியாவிற்குமான உறவுநிலை கைவிட்டுபோனதோ அங்கிருந்துதான் அவ்வுறவு நிலை தொடங்கப்பட வேண்டும் என நாங்களும் எமது மக்களும் கருதுகிறோம் என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. அதன் தலைவர் வேந்தன் வெளியிட்டுள்ள ஊடக  அறிக்கையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன் வெளியிட்ட அறிக்கை... Read more »

மொட்டு எம்.பிக்கள் 7 பேர் ரணிலுக்கு ஆதரவு..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் கோட்டையாக விளங்கிய கம்பஹா மாவட்டத்தில் உள்ள மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவை ரணில் விக்ரமசிங்க பெற்றுள்ளார். மொட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு சபைக்கு தெரிவான 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐவர் மாத்திரமே தற்போது... Read more »

ராஜீவ் காந்தி கொலை வழக்கு சர்வதேச நீதிபதிகள், முன்னிலையில், அல்லது சர்வதேச கண்காணிப்பில் மீள் விசாரணை வேண்டும்…….,! அரசியல் ஆய்வாளர், சட்டத்தணி சி.அ.யோதிலிங்கம் கோரிக்கை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு சர்வதேச நீதிபதிகள், முன்னிலையில், அல்லது சர்வதேச கண்காணிப்பில் மீள் விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமன சி.அ.யோதிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் அவர் நடாத்திய... Read more »

Fwd: வல்வை முதியோர் இல்லத்தின் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த ஆளுநர் பணிப்புரை

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் எவ்வித அனுமதியும் இன்றி செயற்படும் முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விடுத்த பணிப்புரைக்கு அமைய, ஆளுநரின் செயலாளரால் பருத்தித்துறை பிரதேச செயலாளருக்கு கடிதம் ஊடாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், வல்வை முதியோர் இல்லம் எவ்வித வசதிகளும்... Read more »

அலி சப்ரி ரஹீமின் பாராளுமன்ற வருகைக்கு ஒரு மாத கால தடை..!

தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பில் அலி சப்ரி ரஹீமின் பாராளுமன்ற வருகை இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவர் சமல் ராஜபக்ஷவினால், 2024 ஜனவரி 24 ஆம்... Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: புதிய ஆதாரங்களை புறக்கணித்த அரசு! பேராயர் அதிருப்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான புதிய ஆதாரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தாம் விடுத்த கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகவும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் வாய்மொழி மூல... Read more »

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மீதான நம்பிக்கையில்லா பிரேரணை சற்று முன்னர் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் கையளிக்கப்பட்டது. எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரினால் நம்பிக்கையில்லா பிரேரணை... Read more »

பாராளுமன்ற உறுப்பினராக எஸ்.சி.முத்துக்குமாரன

பாராளுமன்ற உறுப்பினராக எஸ்.சி.முத்துக்குமாரன, இன்று காலை சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அண்மையில், பாராளுமன்ற உத்திக பிரேமரத்னவின் இராஜினாமா செய்திருந்த நிலையில் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியது. இதனையடுத்து, உத்திக பிரேமரத்னவுக்குப் பிறகு அதிக வாக்குகளைப் பெற்ற எஸ். சி. முத்துக்குமாரன... Read more »

சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்குவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு…!

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கட்சி உறுப்புரிமை மற்றும் அவர் வகிக்கும் பதவியில் இருந்து இடைநிறுத்துவதற்கான செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்திக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவு மீள நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு... Read more »