நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைப்பு…!

நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளன. 92 ஒக்ரேய்ன் பெற்றோல் விலை  குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல், மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பெற்றோல் 95, சுப்பர் டீசல் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை. அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள்... Read more »

மருதங்கேணி பாலம் உடைப்பெடுக்கும் அபாயம்,  போக்குவரத்து முடங்கலாம்.! 

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில்  அமைந்துள்ள பாலம்  உடைப்பெடுக்கும்  அபாய நிலையில் உள்ளது. தற்போது பெய்துவரும்  கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலே குறித்த பாலம் முழுமையாக உடைப்பெடுக்கும் அபாய நிலையில் உள்ளது. நேற்றைய தினம் பகுதியளவில் குறித்த பாலம் சேதமடைந்துள்ளது. தற்போது கனரக... Read more »

மாவீரர் நாளில் கஜேந்திரகுமார் எம்.பி பாதுகாப்பு தரப்பு முரண்பட்ட விவகாரம் – பாதுகாப்பு செயலாளர் கருத்து!

உயிரிழந்தவரை நினைவு கூர தடை செய்யப்படவில்லை என்றும் மாவீரர் தின நிகழ்வுகளில் பாதுகாப்பு தரப்பினரினரால் ஏற்பட்ட இடையூறு தொடர்பாக நான் அறியவில்லை எனவும் பாதுகாப்பு செயலாளர் சம்பத் துயகொந்த தெரிவித்துள்ளார். அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம் நிறைவடைய முன் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படைகளின்... Read more »

மன்னாரில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

மன்னார் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களின் பிரதிநிதி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். காணிகள் தொடர்ந்தும் கடற்படையினரின் கீழ் காணப்படுவதால் தமிழ் மக்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்தை பேண முடியாத நிலை... Read more »

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையினை கண்டறியும் நோக்கிலான உயர் மட்ட கலந்துரையாடல்…!

யாழ்ப்பாண மாவட்டத்தின் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையினை கண்டறியும் நோக்கிலான உயர் மட்ட கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இவ் உயர்மட்டக் கலந்துரையாடலுக்கு பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொன்த, மற்றும் கடற்றொழில் அமைச்சர் ... Read more »

வெள்ளவாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்ற ஆளுநர் பணிப்பு

வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள... Read more »

இந்திய-இலங்கை பேச்சுக்கு பின்னரும் இந்திய மீனவர்களின் கடற்கொள்ளை குறைவில்லை!

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் வடபகுதி மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடமாகாண தமிழ் மீனவ தலைவர்கள் இருவர் இந்த வாரம்... Read more »

ஜனாதிபதி அனுரவின் கொள்கை விளக்க உரை குறித்து தமிழ் தலைவர்கள் அதிருப்தி

மிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்படவில்லை என வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். புதிய அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை முன்வைத்து ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க நவம்பர் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில்... Read more »

சவேந்திர சில்வா உள்ளிட்ட மூவருக்கு எதிராக தடை விதிக்க கோரிக்கை

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்புப் படைத் தலைவர் உட்பட மூவருக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு பிரித்தானியாவை கேட்டுக் கொண்டுள்ளது. பாதுகாப்புப் படைகளின் பிரதானி... Read more »

புதிய அரசாங்கத்திற்கு இருக்கும் சவாலை தமிழ் கட்சியொன்று நினைவூட்டுகிறது

இறுதிப் போரின் இறுதிப் காலப்பகுதியில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதினைந்து வருடங்களாகியும் நீதி கிடைக்காத நிலையில், புதிய அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சியொன்று நினைவுபடுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அழிக்கப்பட்ட இரத்தம் தோய்ந்த முள்ளிவாய்க்கால்... Read more »