முஸ்லிம் மக்களும் ஆதரவு…..!

முல்லைத்தீவு நீதிபதி டீ.சரவணராஜா அவர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் தமிழ் அரசியல் கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நாளைய (20) பூரண கதவடைப்பு பொது முடக்கத்திற்கு யாழ்ப்பாணம் முஸ்லிம் வர்த்தகர்கள் உள்ளிட்ட முஸ்லிம் மக்களும் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றனர். அவர்கள் வெளியிட்ட... Read more »

தமிழ் மீனவர்கள் என்பதாலேயே கடற் படையின நடவடிக்கை  எடுக்கவில்லை……! வடமராட்சி மீனவர்கள் குற்றச்சாட்டு.

பாதிக்கப்படுவது தமிழ் மீனவர்கள் என்பதாலயே கடற்படை எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபடும்  மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பததுவதில்லை என வடமராட்சி மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதே வேளை எல்லை தாண்டும் மீனவர்களை கட்டுப்படுத்த அரசுகள் தவறுவதால் நாம் உண்டியலில் பணம் சேர்த்து இந்திய... Read more »

இலங்கை – இந்திய கப்பலில் தங்கம் கடத்தல்? – காங்கேசன்துறையில் இரண்டு மணிநேர சோதனை!

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கப்பல் சேவையானது கடந்த 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றையதினம் இலங்கையில் இருந்து முற்பகல் 11 மணியளவில் இலங்கை – காங்கேசன்துறையில் இருந்து இந்தியா – நாகபட்டினம் நோக்கி கப்பலானது பயணிக்க இருந்தது. இந்தியா செல்லவுள்ள பயணிகளும் பயணத்தை ஆரம்பிக்க இருந்த... Read more »

வடக்கு கிழக்கு ரீதியிலான கடையடைப்புக்கு ஆதரவு கோரி தமிழ் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம்!

எதிர்வரும் 20ம்  திகதி வடக்கு கிழக்கில் முழுமையாக இடம்பெறவுள்ள பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரி தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும் ஆதரவாளர்களும் வடக்கின் பிரதான நகரங்களில் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்கு கண்டனம் தெரிவித்தும் மட்டக்களப்பு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைகள்... Read more »

அலி சஹீர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு!

அலி சஹீர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக சற்றுமுன்னர்  சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து  ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நஷீர் அஹமட் கடந்த தினம் பதவி நீக்கப்பட்டார். இந்நிலையில்,... Read more »

இந்திய – இலங்கை அரசின் திட்டத்திற்குள் சிக்கி பலிக்கடா ஆக வேண்டாம் – இசையமைப்பாளர் சந்தோஷிடம் முன்னணி கோரிக்கை

எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில், தென்னிந்திய பிரபல இசையமைப்பாளரால் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியானது நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இசை நிகழ்ச்சியை அந்த நாட்களில் நடாத்த வேண்டாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர். இன்றையதினம் அவர்கள் வெளியிட்ட... Read more »

காக்கைதீவு – சாவக்காடு கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு சுமூகமான தீர்வு…! டக்ளஸ்.

யாழ்ப்பாணம், சாவக்காடு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சஙகம் மற்றும் காக்கைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டிருந்த தொழில்சார் முரண்டுபாடுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டின் மூலம் சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட இரண்டு கடற்றொழில் சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கும் பொதுவான இறங்குதுறை மற்றும் மீன்... Read more »

தமிழ் அரசியற் கட்சிகளை வழிப்படுத்த மக்கள் இயக்கமொன்று பலம் பெற வேண்டும்…! பொ.ஐங்கரநேசன்  சுட்டிக்காட்டு.

விடுதலைப் புலிகள் இருந்தவரைக்கும் அவர்களின் அரசியல் துறையே தமிழ்த் தேசியக் கட்சிகளின் வழிகாட்டும் பீடமாக இருந்தது. அவர்கள் எதை முன்மொழிந்தார்களோ அதையே எமது கட்சித் தலைவர்கள் வழிமொழிந்தார்கள். தமிழ் மக்களுக்கான ஒரு தேசியத் தலைமை இல்லாத நிலையில் தமிழ் அரசியற் கட்சிகள் ஒவ்வொன்றும் திக்கொன்றாக ... Read more »

வடக்கில் இவ்வருடம் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை – விவசாய அமைச்சர்

வடமாகாணத்தில் இவ்வருடம் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நேரத்தில் உரங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் நெற்செய்கைக்கு மட்டுமன்றி மரக்கறி, பழங்கள் உள்ளிட்ட பயிர்களுக்கும் விவசாய திணைக்களம் அதிகூடிய ஆதரவை வழங்கும் எனவும் விவசாய... Read more »

ஹர்த்தால் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல்….!(video)

20ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் ஒன்று (15.10.2023 ) மாலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் இடம்பெற்றது. இதன் போது ஹர்தால் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள், கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களை சந்திப்பது, இந்தியப் பிரதமருக்கான கடிதம்... Read more »