யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மாளிகையை ஏலம் விடுவதற்கு முயற்சி – உரிமையாளர்களுக்கு அறிவிக்காமல் திரைமறைவில் சூழ்ச்சி…!

யாழ்ப்பாணம் வலி வடக்கில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அதனுடன் சூழ உள்ள தனியார் காணிகளை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்க திரைமறைவில் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, வலி. வடக்கு தெல்லிப்ழைப் பிரதேச... Read more »

தமிழ் ஈழத்திற்கான மக்கள் ஆணை கிடைத்து 46 ஆண்டுகள் தெரியாதா? வீரசேகரவுக்கு – சபா குகதாஸ்

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவர்கள் அமெரிக்கா விசா கிடைக்காத நிலையில் நீதிபதி சரவணராஜா விவகாரத்திலும் ஆட்டம் கண்டு புலம்பியவர் தற்போது புதுக் கயிறு விடுவது போல தமிழர்கள் ஆயுதபலத்தால் கிடைக்காத தமிழீழத்தை பதின்மூன்றாம் திருத்தம் மூலம் பெற முட்படுகிறார்கள் என முட்டாள் தனமாக... Read more »

வடக்கு விவசாயிகள் ஏற்றுமதி தரச் சான்றிதழ் பெறுவதை இலகுபடுத்தவும் – வடக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை!

வடக்கு விவசாயிகள் ஏற்றுமதி தரச் சான்றிதழ் பெறுவதை இலகுபடுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர், விவசாய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதில் வடக்கு விவசாயிகள் கடும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றார்கள் எனவேவிவசாயிகள் ஏற்றுமதி தரச் சான்றிதல் பெறுவதை இலகுபடுத்துமாறு... Read more »

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கோப்பாய் தொகுதிக் கிளையின் நிர்வாகத் தெரிவு…!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கோப்பாய் தொகுதிக் கிளையின் நிர்வாகத் தெரிவு நேற்று சனிக்கிழமை (14) மாலை நீர்வேலியில் நடைபெற்றது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் ம.கபிலன் வாக்கெடுப்பின் மூலம் வெற்றி பெற்று தொகுதிக் கிளைத் தலைவராக தெரிவானார். அ.பரஞ்சோதி... Read more »

மறவன்புலவு சச்சிதானந்தனுக்கு நாகப்பட்டினம் வணிக சங்கம் கெளரவிப்பு

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் தொடக்க விழா இன்று சனிக்கிழமை நாகப்பட்டினம் துறையில் காலை  ஆரம்பிக்கப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்பலவு சச்சிதானந்தனும் சென்ற நிலையில் குறித்த கப்பல் சேவையை செயற்படுத்துவதற்கு முன் நின்று உழைத்தமைக்காக நாகப்பட்டினம் வணிகர்... Read more »

தேர்தல்கள் ஒத்திவைக்கப்படமாட்டாது- பொதுஜன பெரமுன

அடுத்த மாகாண சபைத் தேர்தலும் ஜனாதிபதித் தேர்தலும் ஒத்திவைக்கப்படாமல் நடைபெறும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் உரிய நேரத்தில் இயல்பாகவே நடத்தப்படும் என்பதால், எந்தக் கட்சிக்கும் அதனை ஒத்திவைக்க வாய்ப்பில்லை என அதன் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன சுட்டிக்காட்டினார்.... Read more »

யாழில் தமிழ் எம்.பிக்களுடன் பிரித்தானிய அமைச்சர் சந்திப்பு!

யாழில் தமிழ் எம்.பிக்களுடன் பிரித்தானிய அமைச்சர் சந்திப்பு! பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் திருமதி பென்னி மோர்டான்ட்க்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று பிற்பகல் 7மணியளவில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.வி.விக்னேஸ்வரன்,... Read more »

இந்திய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி இடையில் சந்திப்பு இருநாட்டு ஒத்துழைப்புக்களை பலப்படுத்தும் வகையில் 03 ஒப்பந்தங்கள் கைசாத்து 

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) கூட்டத்தில் பங்கேற்க நாட்டிற்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பு 11.10.2023 பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்திய – இலங்கை  உறவுகளை  மேலும்... Read more »

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 36-வது ஆண்டு நினைவேந்தல்!

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 36-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது 1987 ஆம் ஆண்டு இதே மாதம் பதினோராம் பன்னிரண்டாம் திகதிகளில் கொக்குவில் பிரம்படி பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொது மக்களை கொடூரமாக இந்திய இராணுவம் கொலை செய்தது. அந்நாளின் 36 வது... Read more »

முதல் பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதியின் 36 ஆவது நினைவு தின நிகழ்வு

முதல் பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதியின் 36 ஆவது நினைவு தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு தர்மபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், சாஸ் நிர்மலநாதன், ... Read more »