யுவதி உட்பட ஜந்து பேர் சாவு..!

முந்தலம் 61 ஆவது சந்தியில் உள்ள வீதியொன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு யுவதிகள் மீது இன்று (23) முற்பகல் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் யுவதி ஒருவர் உயிரிழந்தார். மற்றைய யுவதி ஆபத்தான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.... Read more »

வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு சீனா அரசாங்கத்தினால் உதவிப் பொருட்கள்…!

வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய சீனா அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள 1500 மில்லியன் ரூபாய் பெறுமதியான உதவிப் பொருட்கள் உரியவர்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று(23) நடைபெற்றது. சூம் தொழினுட்பத்தினூடாக  இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில்... Read more »

கிராம உத்தியோகத்தர்களின் சம்பளத்தில் மாற்றம்…!

நாட்டிலுள்ள 13,000க்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஒரு தனி சேவையை ஏற்படுத்தும் அரசியலமைப்பு அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு நாட்டில் 13,000 இற்கும் அதிகமான கிராம உத்தியோகத்தர்களுக்கு தனியான... Read more »

தையிட்டி விகாரைக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம்!

சட்டவிரோதமாக  தையிட்டியில் அமைக்கப்பட்ட  திஸ்ஸ விகாரைக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தியவாறு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விகாரையானது தமிழ் மக்களது காணிகளை அபகரித்து சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து  குறித்த விகாரையை அகற்றுமாறு கோரி ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டம் தமிழ் தேசிய... Read more »

மஸ்கெலியாவில் வீதியில் சரிந்த பாரிய மரம்…!

மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் மல்லியப்பூ தோட்ட பகுதியில் பாரிய மரம் ஒன்று சாய்ந்ததால் சாமிமலை மஸ்கெலியா, காட்மோர் மஸ்கெலியா வீதி சுமார் மூன்று மணித்தியாலம் தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணியாளர்கள் மற்றும் மல்லியப்பூ தோட்ட தொழிலாளர்கள்  இணைந்து  சாய்ந்த... Read more »

நாட்டின் சில பகுதிகளில் இரு நாட்களாக மின் தடை

நாட்டில் ஏற்பட்டுள்ள தென்மேல் பருவபெயர்ச்சி காலநிலை மாற்றத்தினால் கடும் காற்று, பலத்த மழையூடான வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் சில பகுதிகளில் இரு நாட்களாக மின் தடைப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இந் நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, வலப்பனை, கொத்மலை, ஹங்குராங்கெத்த, மற்றும் அம்பகமுவ... Read more »

இளைஞர் மீது பொலிஸார் வாள்வெட்டு!!

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் மீது சிவில் உடையில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் யாழ். தொல்புரம் மத்தியில் நேற்று இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டவர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் விசேட பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் எனக்... Read more »

ஒரு கருவில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்

ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்னும் தாயே இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார். மருத்துவதுறையின் வரலாற்றில் இயற்கை முறையில் இவ்வாறு கருத்தரிப்பதானது அரிதான... Read more »

திடீரென மயங்கி வீழ்ந்து ஒருவர் மரணம்!

யாழ்ப்பாணம், ஊரெழு கிழக்கில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவர், திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். ஊரெழுப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகே நேற்று இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 48 வயதுடைய சிங்கரத்தினம் சசிக்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்... Read more »

ஈரான் தூதரகத்திற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த ரணில்!

கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு இன்று புதன்கிழமை  காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின்  திடீர் மரணத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதியை, இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலி ரீஸா டெல்கோஷ் உள்ளிட்ட பணிக்குழாம்... Read more »