தென்மேல் பருவப்பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக இலங்கையை ஊடறுப்பதனால் நிலவுகின்ற காற்றும் மழையுடனான வானிலையையும் தொடரக்கூடுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல்... Read more »
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவியுள்ளது. கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர். Read more »
நிகவெரட்டிய – கந்தேகெதர காட்டுப்பகுதிக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக நிகவெரட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். நிகவெரட்டிய, ஹூலுகல்ல பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.எம்.ருவன் சதுரிக எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் இலங்கை... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டெஸ்லா மற்றும் ஸ்டார் லிங்க் நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க்கை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு இந்தோனேசியா – பாலியில் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது ஸ்டார் லிங்க் வலையமைப்பை இலங்கையில் செயற்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
இஸ்ரேலில் கடந்த அக். 7-இல் நடத்தப்பட்ட தாக்குதலின்போது ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட 3 பேரின் சடலங்களை காஸாவிலிருந்து இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் ராணுவ செய்தித் தொடா்பாளா் டேனியல் ஹகேரி தெரிவிக்கையில், இஸ்ரேலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 3... Read more »
ரஷ்யா – உக்ரைன் போரில் ஈடுபடுவதற்காக கூலிப்படை நிறுவனங்களால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட குடிமக்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 400 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இராணுவப் பின்னணியைக் கொண்ட இலங்கைப் பிரஜைகள் உக்ரேனில் போரிடுவதற்காக கடத்தப்படுவதாக வந்த தகவல்கள் தொடர்பாக அதிகாரிகள் இந்த மாத... Read more »
இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதியின்றி ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுக்கவும் கண்காணிக்கவும் ஒத்துழைக்குமாறு அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணைச் செயலாளர் டொனல்ட் லூ, இலங்கை விஜயத்தின்போது... Read more »
இன்று நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் மீள் அறிவித்தல் வரை சிறிய படகுகளின் ஊடாக மீன்பிடியில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. கடலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களைக் கருத்திற்கொண்டு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதன்படி, அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டில்... Read more »
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து அவருக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். பிரித்தானிய பிரஜையாக இருந்த போது இலங்கையில் பாராளுமன்ற... Read more »
இலங்கைக்கான ஈரான் தூதுவர் மீது கொழும்பில் வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அதாவது கொழும்பிலுள்ள கட்டிடத் தொகுதி ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் வைத்து இந்த தாக்குதல் நேற்றைய தினம் நடாத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலை நடாத்தியதாக கூறப்படும் கறுவாத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்... Read more »