தென்னாப்பிரிக்காவில் பேருந்து – வான் மோதி விபத்து: 20 பேர் பலி; பலர் மருத்துவமனையில் அனுமதி

தென்னாப்பிரிக்காவின் வடக்கு லிம்போபோ மாகாணத்தில் உள்ள வீதியில் ஏற்பட்ட பாரிய விபத்தில் 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்றைய தினம் (14.02.2023) இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த அனர்த்தம்... Read more »

துருக்கியில் மீட்புக் குழுக்கள் மோதல் – முக்கிய இரு நாடுகள் வெளியேறுகிறது – மோசமடையும் நிலவரம்!

துருக்கி மற்றும் சிரியா நில நடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28000 கடந்துள்ளநிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. நிலநடுக்கம் ஏற்பட்டு 100 மணித்தியாலங்கள் கடந்துள்ள நிலையில், பலர் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இந்தநிலையில், மீட்புப் பணிகளில் ஈடுபடும் குழுக்களுக்கிடையில்... Read more »

21 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: துருக்கி- சிரியாவில் மீட்பு பணிகள் தீவிரம்

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துருக்கியின் காஸியான்டெப் நகரில் கடந்த 6ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப்... Read more »

உலகை உலுக்கிய துருக்கி நிலநடுக்கம்!

உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இதற்கமைய தற்போதைய தகவல்களின் படி,இதுவரையில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 20,000 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைவரையும்... Read more »

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம்…!

இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் வடக்கு கடற்கரையில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . இந்த நிலநடுக்கத்தில் இதுவரையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. ஜெயபுரா நகரின் தென்மேற்கில் 10 கிலோ மீட்டர் தூரத்தில்,இன்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.28 மணிக்கு (06:28... Read more »

24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களை கொன்று குவித்த உக்ரைன்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்ய வீரர்கள் தொடர்பில் உக்ரைன் முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. இருதரப்பும் நாளுக்கு நாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில் தங்களுக்கு எதிரான போரில் முதன்முறையாக 24 மணி நேரத்தில் 1,030 ரஷ்ய வீரர்கள்... Read more »

கதி கலங்க வைக்கும் துருக்கியின் மரண ஓலம் : பலி எண்ணிக்கை 15,000ஐ தாண்டியது

துருக்கி – சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், இதுவரை 15,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையில் அமைந்துள்ள... Read more »

துருக்கியில் பாரிய நிலநடுக்கம்: சிரியாவில் 20 ஐ.எஸ் கைதிகள் தப்பியோட்டம்

துருக்கியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தையடுத்து, சிரியாவிலுள்ள சிறைச்சாலையில் கைதிகள் கலகங்களில் ஈடுபட்டதுடன், 20 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். சிரியாவின் வடமேற்குப் பிராந்தியத்தில், துருக்கி எல்லையிலுள்ள ரஜோ நகருக்கு அருகிலுள்ள சிறையிலிருந்தே இவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். தப்பியோடியவர்களில் பெரும்பாலானோர் ஐ.எஸ். இயக்கத்தின் அங்கத்தவர்கள் என சிறைச்சாலை... Read more »

மோசமான பேரழிவு -துருக்கி அதிபர் வர்ணிப்பு – பலி எண்ணிக்கை 2300 ஐ கடந்தது

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2300 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1500 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சிரிய பகுதியில் 810 பேர்... Read more »

பாகிஸ்தானில் படகு கவிழ்ந்ததில் 10 சிறுவர்கள் உயிரிழப்பு

வடமேற்கு பாகிஸ்தானில் படகு கவிழ்ந்ததில் 10 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதரஸாவில் இருந்து நேற்று (29.01.2023) 25 முதல் 30 மாணவர்களுடன் பயணம் செய்த படகு கவிழ்ந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. இறந்த சிறுவர்கள் ஏழு மற்றும் 14 வயதுக்கு இடைப்பட்டவர்கள்... Read more »