ஆப்கானிஸ்தான் ஐ.எஸ். புள்ளி மீது “ட்ரோன் தாக்குதல் நடத்தி கொன்ற” அமெரிக்கா –

காபூல் விமான நிலையத்தில் இரண்டு நாள்கள் முன்பு நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐஎஸ்-கே குழுவுக்கு திட்டமிடல் பணிகளை மேற்கொண்ட ஒருவர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் அவர் கொல்லப்பட்டதாக நம்புவதாகவும் அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. நங்கஹார் மாகாணத்தில் வைத்து... Read more »

பாகிஸ்தான் தொழிற்சாலையில் தீ விபத்து: 15 பேர் பலி..!

பாகிஸ்தானில் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில் நேற்று தீப்பிடித்தது.  அப்போது தொழிற்சாலைக்குள் 26 தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் பல மணி நேரம்... Read more »

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலைய இரட்டை குண்டுவெடிப்பு – ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது –

இதற்கிடையில், காபூல் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை வேட்டையாட போவதாக எச்சரித்துள்ளார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில் அந்த நாட்டில் இருந்து, எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேற உள்ளன.... Read more »

காபூல் விமான நிலையத்தில் தற்கொலை குண்டுவெடிப்பு 13 பேர் பலி….!

  ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் தெரிவித்துள்ளது. அது தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் என தெரிய வந்துள்ளதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார். அந்த சம்பவத்தில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரம்... Read more »

ஆப்கானியர்கள் காபூல் விமான நிலையம் செல்ல தலிபான்கள் தடை…!

ஆப்கானிஸ்தானியர்கள், வெளிநாட்டில் அடைக்கலம் புகுவதை தடுக்க காபூல் விமான நிலையம் செல்லும் சாலையை தலிபான்கள் அடைத்துள்ளனர். வெளிநாட்டினர் செல்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்து உள்ளனர்.ஆப்கனை தலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததை தொடர்ந்து, அவர்களுக்கு பயந்து அந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு வெளியேற முயற்சி... Read more »

உலக சுகாதார நிறுவனத்தின் கோரிக்கை…!

தடுப்பூசி ஏற்றத்தாழ்வை சுட்டிக்காட்டி மூன்றாவது டோஸ் திட்டங்களை ஐரோப்பிய நாடுகள் நிறுத்திவைக்குமாறு உலக சுகாதார மையத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே கடந்த மாதமும் அவர் இதுபோன்றதொரு கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், அந்த கோரிக்கையை முன்வைக்கும்போதே இஸ்ரேல் மூன்றாவது டோஸ் செலுத்தும்... Read more »

காபூல் விமான நிலையத்தை பாதுகாத்தது ஏன்? ஜோ பைடன்…!

ஆப்கானிஸ்தானில் பாதிக்கபட்ட மக்களை விமான மூலம் வெளியேற்ற காபூல் விமான நிலையத்தைப் பாதுகாத்தோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசுகையில், இராணுவ விமானம் மட்டுமல்ல, பிறநாட்டு விமானங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்... Read more »

ஆப்கானில் தேசிய கொடியை ஏந்திய மக்கள் பேரணியில் தலிபான்கள் துப்பாக்கி சூடு…!

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் நேற்று புதன்கிழமை தேசியக் கொடியினை ஏந்தி முன்னெடுக்கப்பட்ட மக்கள் பேரணியில் தலிபான்களால் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்ததாக அந் நாட்டு சுகாதாரத்துறை வட்டாரங்கள் சர்வதேச ஊடகங்களிடம் உறுதிபடுத்தியுள்ளன. ஆகஸ்ட் 15... Read more »

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு இன்று முதல் புதிய விதிமுறைகள்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு இன்று முதல் புதிய விதிமுறைகள் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் திருத்தப்பட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வரும் அனைவரும் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன்,... Read more »

ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள்! – ஆப்கான் முன்னாள் ஜனாதிபதியுடன் பிரதமர் பேச்சு –

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை தொடர்பில், அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துரையாடியுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் இதனை கூறியுள்ளார். நாட்டின் முன்னேற்றங்கள் குறித்து விசாரிக்கவும், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இலங்கையின் தொடர்ச்சியான... Read more »