விவசாய அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு அடுத்த மாதம் முதல் வழங்கப்படுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இந்த வருடம் 58,770 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக செய்கை வறட்சி காரணமாக அழிவடைந்துள்ளது. இதற்கமைய... Read more »

புதிய வரிகள் விதிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு

நாட்டு மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது என ஜனாதிபதி தெளிவாக கூறியிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் வருவாய் ஈட்டும் திணைக்களங்களின் வருமான இலக்குகளை விரைவாக அடைவதற்காக நிதி அமைச்சில் நிறுவனங்களின் தலைவர்களுடன்... Read more »

சுபாஸ் விடுதியில் இயங்கிவந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கிளினிக்குகள் அனைத்தும் இடமாற்றம்!

கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சுபாஸ் விடுதியில் இயங்கிவந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அனைத்து கிளினிக்குகளும் திங்கட்கிழமை (16) முதல் வைத்தியசாலையின் உட்புறம் இரு வெவ்வேறு இடங்களில் நடைபெறும் என வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ஊடகங்களுக்கு... Read more »

நாகபட்டினத்தில் இருந்து புறப்பட்ட கப்பல் இலங்கை – காங்கேசன்துறையை மதியம் 12.15 மணியளவில் வந்தடைந்தது…! (VIDEO)

50 பயணிகளுடன் இந்தியா – நாகபட்டினத்தில் இருந்து புறப்பட்ட கப்பல் இலங்கை – காங்கேசன்துறையை நோக்கி மதியம் 12.15 மணியளவில் வந்தடைந்தது. மீண்டும் இன்று பி.ப 2.00 மணியளவில் 31 பயணிகளுடன் இந்தியா – நாகபட்டினம் நோக்கி சென்றது. விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து நிகழ்வு... Read more »

மறவன்புலவு சச்சிதானந்தனுக்கு நாகப்பட்டினம் வணிக சங்கம் கெளரவிப்பு

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் தொடக்க விழா இன்று சனிக்கிழமை நாகப்பட்டினம் துறையில் காலை  ஆரம்பிக்கப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்பலவு சச்சிதானந்தனும் சென்ற நிலையில் குறித்த கப்பல் சேவையை செயற்படுத்துவதற்கு முன் நின்று உழைத்தமைக்காக நாகப்பட்டினம் வணிகர்... Read more »

குப்பை கொழுத்திய போது ஆடையில் பற்றிய தீயினால் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு….!

வீட்டில் குப்பை கொழுத்திய போது எதிர்பாராத வகையில் ஆடையில் பற்றி எரிந்த தீயினால் காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த 2 வயது குழந்தை உள்ளிட்ட நான்கு பிள்ளைகளின் தாயான சுகந்தன் தயாபரி (வயது-37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.... Read more »

புகையிரத்தில் ஏற முற்பட்ட போது தவறி விழுந்த காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!

புகையிரத்தில் ஏற முற்பட்ட போது தவறி தண்டவாளத்தில் விழுந்த காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த 3 பெண் பிள்ளைகளின் தந்தையான மாணிக்கம் விஜயரட்ணம் எனும் 69 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 8 ஆம் திகதி இரவு 07.30... Read more »

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வடக்கில் 18 ஆயிரத்து 759 மாணவர்கள் : 209 பரீட்சை மண்டபங்கள் – மாகாண பணிப்பாளர் குயின்ரஸ்

நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாக உள்ள தரம் 5இற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் வடமாகாணத்தில் இருந்து 18 ஆயிரத்து 759 மாணவர்கள் தோற்றுவதாக வட மாகாணக் கல்விப் பணிப்பளர் யோன் குயின்ரஸ் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தின் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் தரம் 5இற்கான பரீட்சை ஏற்பாடுகள்... Read more »

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை

தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் நாளை இடம்பெறவுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள்களை கொண்டு செல்லும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அனர்த்த நிலைமைகள் ஏற்படும் இடங்களில் இருக்கும் பரீட்சார்த்திகள் அருகிலுள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக,... Read more »

போலியான ஒன்லைன் மூலம் வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்

ஒன்லைன் மூலம் வேலைவாய்ப்பு தருவதாக கூறி 94 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கரந்தெனிய, தெனகொட பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான சந்தேகநபரைக்... Read more »