புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து..!!

ஆஸ்திரேலியாவும் பிரித்தானியாவும் ஒரு புதிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது அவர்களின் பாதுகாப்பு படைகள் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்படுவதை எளிதாக்குகிறது. பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலர் டேவிட் கேமரூன் மற்றும் பாதுகாப்புச் செயலர் கிரான்ட் ஷாப்ஸ் ஆகியோர், அடிலெய்டில் உள்ள அவர்களது... Read more »

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய நபர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக... Read more »

சட்டம் நிறைவேற்றப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களால் –  சபாநாயகரால் அல்ல என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களால் என்பதுடன்  சபாநாயகரால் அல்ல என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அவர்களுக்கு எதராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலும் நாட்டில் நிலவும்... Read more »

கனடா செல்ல ஆசைப்பட்ட யாழ்ப்பாண இளைஞனுக்கு நேர்ந்த கதி..!

கனடாவிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனிடம் 60 இலட்சம் ரூபாய் மோசடி செய்த  ஹிங்குராங்கொட பகுதியை சேர்ந்த பெண்ணை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பெண்  கடந்த 3 மாதங்களுக்கு முன்னர்  இளைஞனிடமிருந்து 60 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ள... Read more »

தொடருந்து முன் பாய்ந்து தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த ஆசிரியர்..!

ஆசிரியர் ஒருவர் தொடருந்து முன் பாய்ந்து தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர் இந்த சம்பவம் ரத்கம – புஸ்ஸவிற்கு இடையில் 106.05 கிலோமீட்டர் மைல்கல் அருகில் நேற்று (20.1.2024) முற்பகல்  இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த தொடருந்து முன்... Read more »

மாணவர் விசாவில் அவுஸ்திரேலியா செல்லவிருப்போருக்கு சிக்கல்..!

அவுஸ்திரேலியா செல்ல இருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கான புதிய விசா விதிமுறைகள் இந்த வாரம் முதல் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிற்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை அண்மை காலமாக அதிகரித்ததையடுத்து அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதேவேளை குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால்,... Read more »

ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் யாழிற்கு திடீர் விஜயம்…!

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்றையதினம்(21)  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இன்று(21) காலை யாழ் ஆயர் இல்லத்திற்கு சென்ற  ரவி கருணாநாயக்க,  யாழ்.மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து,  ஊடகவியலாளர் சந்திப்பிலும்  ரவி கருணாநாயக்க கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »

டிலான் பெரேராராவும் பதவி விலகினார்..!

நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவிலிருந்து (கோப்) விலக தீர்மானித்துள்ளார். கோப் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமைக்கப்பட்டமையை அடுத்து அதன் உறுப்பினர்கள் பதவி விலகல் செய்து வருகின்றனர். அவர்களில், அநுர குமார திசாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன... Read more »

வெடுக்குநாறிமலை விவகாரம்; நீதிபதிக்கு பேஸ்புக் ஊடாக அச்சுறுத்தல்!

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரி தின  நிகழ்வு தொடர்பில் பொலிஸாரால் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்த  வவுனியா  நீதவான் நீதிமன்ற  நீதிபதிக்கு சிங்கள முகப்பு  ஊடாக  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  எஸ்.... Read more »

தட்டிக்கேட்க இந்தியா தயங்கினால் தமிழர்கள் நிச்சயம் தூக்கியெறிவர் – பொறுமைக்கும் எல்லையுண்டு என்று எச்சரிக்கிறார் சரவணபவன்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் தலையிட அதிகாரமுள்ள தரப்பாக இருக்கும் இந்தியா தொடர்ந்தும் மௌனம் காக்குமாக இருந்தால், தமிழ் மக்களின் ஆதரவை முற்றாக இழக்கும். இது வேறு தரப்புக்களுக்கு வாய்ப்பாக அமையும். இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன்... Read more »