ஒருவரது நிலை கவலைக்கிடம் – இந்த நிமிடம் வரை அமைச்சரோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ வந்து ஆரதவு தரவில்லை – மிக வேதனையாக உள்ளது என போராட்டகாரர்கள் குமுறல்!

இந்திய மீன்பிடியாளர்களது எல்லைதாண்டிய அத்துமீறும் செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில் தமக்கு ஆதரவு தெரிவித்து எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரோ அமைச்சரோ வரவில்லை என உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம்... Read more »

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நோய்; பஸ் கவிழ்ந்து விபத்து!

மொனராகலை – வெல்லவாய, தனமல்வில பிரதான வீதியின் வெல்லவாய குமாரதாச சந்தியில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. விபத்து காரணமாக 7 பாடசாலை மாணவர்கள் மற்றும் பஸ் சாரதி உட்பட 15 பேர் வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில்... Read more »

சீனாவிடம் இருந்து இலங்கைக்கு பெரிய வெங்காயம்..!

சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட பெரிய வெங்காயம் இன்னும் 5 நாட்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார். அதன்பின்னர் உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவடையும். இதற்கு மேலதிகமாக பெரிய வெங்காயத்திற்கு பதிலாக இளஞ்சிவப்பு வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை... Read more »

சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை!

சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் அடுத்தவாரம் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகவுள்ளன. 12 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தாத உலகளாவிய பத்திரங்களை மறுசீரமைக்கும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக ப்ளும்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை, 2022 ஆம் ஆண்டு முதல் செலுத்தப்படாத வெளிநாட்டுக்... Read more »

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதாக சர்வதேசத்தை ஏமாற்றி வரும் ரணில்..!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நீண்ட காலமாக பாரிய கூட்டணியொன்றை அமைப்பதற்கு பாடுபட்டு வருகின்றார். எனினும் அவரால் முடியாதவொன்றை குறுகிய காலத்திற்குள் தான் செய்து காட்டியுள்ளதாக மனிதநேய மக்கள் கூட்டணியின் தலைவர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். மனிதநேய மக்கள் கூட்டணியின் அங்குரார்ப்பண... Read more »

அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்ட விசேட வேலைத்திட்டம்

அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத் திட்டத்தை சிறுதோட்ட அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுத்தவிருப்பதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார். கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஊடாக களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களை மையமாகக் கொண்டு 10,000 நாட்டுக்... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் கஞ்சா கலந்த பீடியுடன் ஒருவர் கைது..!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கஞ்சா கலந்த பீடியுடன் சென்ற ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கைதானவர் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவரை பார்வையிட வந்தவரை வைத்தியசாலை காவலாளிகள் பரிசோதித்த போது கஞ்சா கலந்த... Read more »

நாணயத்தாள்களை சேதப்படுத்தினால் சிறை..!

இலங்கை நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாணயத்தாளை வேண்டுமென்றே உருவச்சிதைத்தல் அல்லது சேதப்படுத்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாணயத்ததாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவோருக்கு மூன்று வருட... Read more »

நிலவும் வரட்சியான வானிலையில் இன்றிலிருந்து மாற்றம்..!

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் இன்றிலிருந்து மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல... Read more »

விபத்தில் சிக்கி பெண் காவல்துறை உத்தியோகத்தர் பரிதாபகரமாக உயிரிழப்பு!

பெண் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பாரவூர்தியொன்றில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக மத்துகம காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து சம்பவமானது நேற்று (20) மாலை இடம்பெற்றுள்ளது. களுத்துறை காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் பெண் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காவல்துறை உத்தியோகத்தர் பணி முடிந்து மலபடா... Read more »