தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்த சுங்க அதிகாரிகள்

மேலதிக நேர சேவைகளில் இருந்து விலகுவதற்கான தொழிற்சங்க நடவடிக்கை இன்று (18) 4ஆவது நாளாகவும் தொடரும் என சுங்க அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதிகாரிகள் தரப்பில் இருந்து தீர்வு கிடைக்காமையால் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அதன் தலைவர் அமில சஞ்சீவ தெரிவித்தார். இதேவேளை,... Read more »

கோப் குழுவில் இருந்து விலகினார் எரான் எம்.பி.

பொது விவகாரங்களுக்கான குழு அல்லது கோப் குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சபாநாயகரிடம் தாம் இதற்கான கடிதத்தை கையளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். நிலையிற் கட்டளையில் மாற்றங்களை... Read more »

புற்றுநோய் சிகிச்சை பிரிவின் சேவைகள் ஸ்தம்பிதம்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மேலதிக சேவைகள் இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச கதிரியல் தொழிநுட்பவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் கடமை புரியும் கதிர் வீச்சு சிகிச்சையாளர்களுக்கு வழங்க வேண்டிய மேலதிக... Read more »

மருந்தகங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்: இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

இந்த நாட்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக விசேட தோல் சிகிச்சை வைத்தியர் நிபுணர் இந்திரா கஹ்விட்ட எச்சரித்துள்ளார். சூரிய ஒளி நேரடியாக சருமத்தில் படுவதால், சருமத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும், தோல் எரியும் தன்மையை... Read more »

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் உயிரிழப்பு!

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 6 ஆம் திகதி கடுவலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர், மறுநாள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். சிறைச்சாலையில் சுகவீனமுற்ற நிலையில்... Read more »

நாட்டின் ஜனாதிபதியாகும் அனைத்து தகுதியும் எனக்கு உண்டு! குமார வெல்கம பெருமிதம்

நாட்டின் ஜனாதிபதியாகும் அனைத்து தகுதியும் தமக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். தமது ஜாதகத்தின் அடிப்படையில் இன்னும் சில நாட்களில் தமக்கு நல்ல காலம் பிறக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உள்ளங் கைகளில் உள்ளது... Read more »

மனித மேம்பாட்டு தராதரத்தில் இலங்கைக்கு கிடைத்த கௌரவம்!

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயல் திட்டத்தின் புதிய ஆய்வறிக்கையின்படி, தெற்காசிய பிராந்தியத்தில் மனித மேம்பாட்டு தராதரத்தில் உயர்வான மட்டத்தைப் பேணும் நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் அண்மைக்காலமாக நிலவும் பலதரப்பட்ட சவால்களுக்கு மத்தியிலும் மனித மேம்பாட்டை முன்னிலைப்படுத்திய இலங்கையின் தொடர் முயற்சிகள்,... Read more »

கனடாவில் கொல்லப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியை!

கனேடிய தலைநகர் ஒட்டாவாவின் புறநகர் பகுதியில் கொல்லப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியை நேற்று இடம்பெற்றது. ஒட்டாவாவில் இலங்கை நேரப்படி இரவு 10.30க்கு இறுதிச் சடங்கு ஆரம்பமானதுடன் அனைவரும் பங்கேற்கக்கூடிய வகையில் திறந்தவெளியில் பொது அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இந்நிகழ்வில் சம்பவத்தில் உயிர் தப்பிய... Read more »

தூக்கில் தொங்கியவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு – இருபாலையில் சம்பவம்!

இன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கியவர், வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளார். இதன்போது இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிற்றம்பலம் பாஸ்கரன் (வயது 61) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் வீட்டுக்கு முன்னால் உள்ள வேப்பமரத்தில் இன்றையதினம் தூக்கில்... Read more »

சமுதாய பாதுகாப்பு குழுக்களிற்கான விசேட கலந்துரையாடல் இன்று பொலிஸ் மா அதிபர் தலைமையில் நடைபெற்றது

சமுதாய பாதுகாப்பு குழுக்களிற்கான விசேட கலந்துரையாடல் இன்று பொலிஸ் மா அதிபர் தலைமையில் இடம்பெற்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் இடம்பெற்றது, இக்கலந்துரையாடலில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் திலான்... Read more »