வட்டுக்கோட்டை சந்தியில் விபத்து – முச்சக்கர வண்டி சாரதி தலையில் காயம்!

இன்று காலை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வட்டுக்கோட்டை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி... Read more »

கொழும்பில் களமிறங்கியுள்ள பொலிஸார்

இலங்கை பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வழிகாட்டலில் டிசம்பர் மாதம் தொடக்கம் பொலிஸ் திணைக்களத்தினால் யுக்திய செயற்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. குறித்த யுக்திய செயற்றிட்டமானது இன்று(14.03.2024) மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தின் முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தூரப்பிரதேசங்களில் இருந்து கொழும்பிற்கு வருகை தரும் பேருந்துகள்... Read more »

உணவு ஒவ்வாமையால் 8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

நமுனுகுல – கனவரெல்ல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் உணவு விசமானதில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் இன்று காலை திடீரென சுகவீனமடைந்த நிலையில், பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு முதல் ஐந்தாம் தரங்களுக்கு இடைப்பட்ட வகுப்புகளில் கற்கும்... Read more »

ஒட்டுசுட்டானில் பரபரப்பு…!

முல்லைத்தீவு  ஒட்டுசுட்டான் நகர் பகுதியில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடி படையினர் இணைந்து மோப்ப நாய்கள் சகிதம் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையான ‘யுக்திய’வின்... Read more »

நாட்டை வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியினரும் நாட்டை வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற வரலாறு உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு  கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள்... Read more »

ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள சூரிய சக்தி பூங்கா!

ஹம்பாந்தோட்டை கொன்னொறுவ சோலார் எனர்ஜி பூங்காவில் 150 மெகாவாட் நிலத்தடி சோலார் பேனல் ஆற்றல் திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான மின்சாரம் கொள்வனவு ஒப்பந்தம் நேற்று(13)  மாலை கைச்சாத்திடப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இந்த திட்டம் 17 உள்ளூர் அபிவிருத்தியாளர்  மற்றும்... Read more »

கெஹலியவுக்கு பிணை வழங்க மறுத்த நீதிமன்றம்..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும்  நால்வருக்கு எதிரான தடுப்பூசி விவகார வழக்கு நிறைவடையும் வரை அவர்களுக்குப் பிணை வழங்க நீதிமன்றம் இன்று (14) மறுத்துள்ளது. மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றமே பிணைக் கோரிக்கையை மீண்டும் நிராகரித்துள்ளது. இதேவேளை, தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசி... Read more »

நாம் பெருமை கொள்கின்றோம் வாழ்த்துக்கள் தங்கை செல்வி

ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்ட ஊடக மாணவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், இவ் ஆண்டு கிருஷ்ணராஜா செல்விக்கு வழங்கப்படுகிறது ——————————— யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38 ஆவது பட்டமளிப்பு விழாவில், ஊடகத்துறையில் ஆண்டுதோறும் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும்,... Read more »

அத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு..!

அத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 300 ரூபாயிலிருந்து 265 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் மாவு ஒரு கிலோகிராம் 190 ரூபாயிலிருந்து 175 ரூபாயாகவும், பருப்பு... Read more »

தீர்வு கிடைக்கும் வரை பாராளுமன்றை புறக்கணியுங்கள் தமிழ் எம்பிக்களிடம் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கோரிக்கை..!!

வட கிழக்கில் தொடர்ச்சியாக  புராதன ஆதி சிவன் ஆலயங்களில் வழிபாட்டுரிமை மறுக்கப்படுவதற்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை  பாராளுமன்ற அமர்வை புறக்கணிக்குமாறு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில். மகா சிவராத்திரி தினத்தில்... Read more »