வெடுக்குநாறி விவகாரத்தை  விசாரிக்க விசேட குழு – அமைச்சர் டக்ளஸ் ஜனாதிபதியிடம் வலியுறுத்து!

இந்து, சைவ மக்களின் விசேட வழிபாட்டிற்குரிய சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி மலையில்  இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்  முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும், குறித்த சம்பவம்... Read more »

வடக்கின் கடற்பரப்பை கண்காணிக்க உருவாகின்றது “கடல் சாரணர் படையணி”

வடக்கின் கடற்பரப்பை கண்காணிக்க உருவாகின்றது “கடல் சாரணர் படையணி” – அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு! வடக்கின்  கடல் பாதுகாப்பை  கண்காணிப்பதற்காக “கடல் சாரணர்கள்:” என்ற தொண்டர் அமைப்பை உருவாக்க அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.... Read more »

வாள்வெட்டு தாக்குதலில் குடும்பஸ்தர் உயிரிழப்பு – கிளிநொச்சியில் வைத்து நால்வர் கைது!

நேற்றையதினம் வீதியால் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரை கும்பல் ஒன்று கடத்திச் சென்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை – மாவடி பகுதியை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் (வயது 23) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து... Read more »

சமுத்திர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழாம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடல்

சமுத்திர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஆரம்பகட்ட கள ஆய்வில் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழாம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை நேற்று (11.03.2024) மாலை சந்தித்து கலந்துரையாடினர். இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும் பொருளாதார துறையின்... Read more »

வெடுக்குநாறிமலை விவகாரம்; பூசகர் உள்ளிட்ட 8 பேர் விளக்கமறியலில்..!

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 8 ஆம் திகதி மகா சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிசிவன்... Read more »

சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கைச் சிறுவன்

இலங்கையைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ரூபிக்ஸ் க்யூப்பை குறுகிய நேரத்தில் சேர்த்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார். நுவரேலியா – தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 5 வயதுடைய பாராதிராஜா அனீத் எனும் சிறுவனே இந்த சாதனையை படைத்துள்ளார். குறித்த சிறுவன் 13.90 வினாடிகளில்... Read more »

நாட்டில் 72 நாட்களில் கொல்லப்பட்ட 21 பேர்

2024 ஜனவரி 1 முதல் மார்ச் 12 வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் 30 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ... Read more »

மன்னார் மனித புதைகுழி வழக்கு…!நீதிமன்றில் ஆஜராகுமாறு சட்டவைத்திய அதிகாரிக்கு அழைப்பு…!

மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கானது  நேற்றையதினம்(11) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் பேராசிரியர் ராஜ் சோம தேவ், SOCO பொலிஸார் உட்பட அனைத்து தரப்பினரினதும் அறிக்கைகள் பெற நடவடிக்கை எடுக்கபட வேண்டும் என்பதுடன் சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸவை அடுத்த தவணையில்... Read more »

பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த அரச பேருந்துக்கு முகமாலை மக்கள் செய்த சிறப்பான வேலை!

கிளிநொச்சி முகமாலை பகுதியில் பாடசாலை மாணவர்களை பேருந்துகளில் ஏற்றாது அரச பேருந்துகள் பயணிப்பது தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டு வந்தனர். குறித்த பிரச்சினை நீண்ட காலமாக காணப்படுகிறது. இதனால் பாடசாலைக்கு உரிய நேரத்துக்கு போக முடியாத நிலை காணப்படுவதாகவும், சில சமயங்களில் பாடசாலைக்கு... Read more »

மக்களுக்கு சிறப்பு தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘யுக்திய’ விசேட நடவடிக்கைக்கு உதவுவதற்காக காவல்துறை தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட அதிரடிப் பிரிவை தொடர்பு கொள்ளுமாறு இலங்கை காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 071 – 8598800 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது ops.narcotics@police.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக பொது... Read more »